ரஞ்சித்தின் ‘சார்பட்டா’ படத்தை பார்த்துவிட்டு திரௌபதி இயக்குனர் மோகன் சொன்ன கமெண்ட்ஸ் (என்ன இப்படி சொல்லிப்புட்டாரு)

0
24671
mohan
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘சார்ப்பட்ட ‘ படம் குறித்து மோகன் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படமும் ஜாதி ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கீழ்த்தட்டு மக்களை கெட்டவர்கள் போல இந்த படம் பிரதிபலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், தான் இந்த படத்தில் நாடகக் காதலை தான் காண்பித்து இருந்தேன் என்று கூறி இருந்தார் மோகன். இருப்பினும் இந்த படம் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று கூட ட்வீட் செய்து இருந்தார் மோகன். இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா படத்தின் ட்ரைலர் குறித்து மோகனிடம் கருத்து கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த மோகன், ட்ரைலரில் நிறைய கடின உழைப்பையும் தரத்தையும் காண முடிகிறது.

இதையும் பாருங்க : WhoIsBalaKrishna ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ் டேக் – மீம் போட்டு வச்சி செய்யும் தமிழ் ரசிகர்கள்.

- Advertisement -

என் ஏரியா படம் . படத்தின் கருத்து நன்றாக இருந்தால் படத்தை நான் கொண்டாடுவேன். 22 ஆம் தேதி வரை காத்திருப்போம். வாழ்த்துக்கள் ரஞ்சித் மற்றும் ஆர்யா. என்று பதிவிட்டுள்ளார். மோகனின் இந்த பதிவு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவரை போலவே ஜாதியை மையமாக வைத்து தொடர்ந்து படம் எடுத்து வரும் பா ரஞ்சித்தின் படங்களும் பல சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1-109-1024x838.jpg

அதே போல ரஞ்சித் மற்றும் மோகன் இருவரும் எதோ எதிரிகளை போல தான் இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி உள்ள சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்துள்ள மோகன், ஒட்டு மொத்த டீமின் நல்ல முயற்சி ‘சார்பட்டா பாரா,பரம்பரை’ நான் கடுவுள் படத்திற்கு பின் ஆர்யாவின் சிறந்த படம். பசுபதி, ஜான் விஜய், டான்சிங் ரோஸ் கதாபாத்திரங்கள் கவனிக்க வைத்திருக்கிறது. ரஞ்சித் சாரின் கடின உழைப்பிற்கு உதாரணம். அமேசானின் அடுத்த ஒரு ஹிட் என்று பதிவிட்டுள்ளார். மோகனின் இந்த பதிவு பலரையும் கொஞ்சம் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் என்பது தான் உண்மை.

-விளம்பரம்-
Advertisement