அடுத்த படத்தின் தலைப்பு ? திரெளபதி இயக்குனர் அதிரடி. அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
43474
Draupathi
- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது. மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளார்கள். சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி. இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது.

- Advertisement -

ஆனால், இந்த படம் குறிப்பிட்ட சமூகத்தினரையும், ஒரு குறிப்பிட்ட ஒரு கட்சியையும் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து சமீபத்தில் தெரிவித்துள்ளார் மோகன். அதில், ஜி, திரெளபதி என கடவுளின் பெயரை வைத்ததால்தான் இப்படத்தின் மீது வன்மம் காட்டப்படுவதாக தெரிவித்துள்ளார் தான் இயக்கும் அடுத்த படத்துக்கும் கடவுள் பெயரிலேயே தலைப்பு வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர்,   விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜூப்லின், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் கூட்டணியில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, திரௌபதி படம் வெளியாவதற்கு முன்பாக பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரிச்சர்ட்டிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில், இயக்குனருடன் பேசியபோது எனக்கு பெரிய ஹீரோக்களின் படம் வந்தால்கூட என்னுடைய அடுத்த படம் ரிச்சர்ட் உடன் தான் இருக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார் உங்கள் இருவருக்கும் உள்ள உறவைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டது அதற்கு பதில் அளித்த ரிச்சர்ட், அது எனக்கும் தெரியவில்லை எங்களுக்குள் எப்படி இப்படி ஒரு உறவு வந்தது என்று தற்போதைக்கு 5 கதை தயாராக இருக்கிறது ஒன்றின் பின் ஒன்றாக நாங்கள் அதனை செய்யவில்லை என்றாலும் என்னுடைய அடுத்த படம் கண்டிப்பாக அவருடன் தான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement