பெண்கள் ஒட்டுமொத்தமாக இதை செய்யுங்கள் – மதுவை ஒழிக்க திரௌபதி இயக்குனர் சொன்ன ஐடியா.

0
655
Draupathi

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தலைவிரித்து ஆடி வருகிறது. கொரோனாவை எதிர்த்து உலக முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, நர்ஸுகள் என பல பேர் தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி வருகின்றனர். கொரோனவினால் நாளுக்கு நாள் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. எந்த ஒரு மதுபான கடைகளும் செயல்படுத்தக் கூடாது என அரசு அறிவித்துள்ளது.

கடை திறந்துகிடக்கு...!'- திருச்சி ...

குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். அதிலும் ஒரு சில பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தும் உள்ளார்கள். மதுக்கடைகள் இல்லாததால் பல குடிமகன்கள் தான் என்ன செய்கிறோம் என்று செய்வதறியாமல் பயத்தியம் பிடித்தது போல் உள்ளார்கள். அதேவேளையில் பலபேர் குடி போதையில் இருந்து மாறி நல்வழிக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் அப்படியே டாஸ்மாக் கடைகளை அடைத்து விட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த அறிவிப்பு குடிமகன்களை சோகத்தில் ஆழ்த்தினாலும் பல குடும்பங்களை ஹாப்பியில் வைத்துள்ளது. டாஸ்மார்க் கடைகள் எல்லாம் மூடப்பட்டு உள்ளதால் பல பெண்கள் சந்தோஷத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்று திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் ஒரு சூப்பரான ஐடியா கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,

அனைத்து பெண்களும் ஒட்டுமொத்தமாக #NoMoreTASMAC பதிவிடுங்கள். உங்கள் கோரிக்கையை அரசாங்கத்திற்கு கேட்கும் வரை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். இது உங்களால் முடியும். கூடிய விரைவில் டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூடிவிட்டலாம் என்று குறிப்பிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவதற்காக பல்வேறு போராட்டங்கள் நடந்தது. ஆனால், அதில் எந்த ஒரு பயனும் இல்லை. இதற்கெல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் வந்துவிட்டது.

-விளம்பரம்-

இயக்குனர் மோகன் அவர்கள் ட்விட்டரில் போட்ட பதிவினால் கூடிய விரைவில் தீர்வு வருமா?? என பல கேள்வியும் உள்ளன. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதில் அளிக்க வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இப்படி பெண்களும், பொதுமக்களும் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் உதவி செய்வாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும். இதேபோல் ட்விட்டரில் கேட்கப்பட்ட பல உதவிகள் எல்லாம் பழனிசாமி அவர்கள் நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement