10 கோடி லாபம் கிடைச்சது, இவ்ளோ தான் கொடுப்பீர்களா? ரசிகரின் கமென்டிற்கு மோகன் பதில்.

0
23474
mohan
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மோகனும் ஒருவர். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமூகத்தில் நிலவும் சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for Draupathi Director Mohan

- Advertisement -

இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது, இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் மக்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளது. இந்த படம் பல குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்றது.

இந்த படம் மூன்று வாரங்கள் மட்டும் தான் திரையரங்களில் ஓடியது. இருந்தாலும் கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து உள்ளது. அதற்கு காரணம் இந்த படம் சமூக ரீதியாக நடக்கும் அநீதிகளை வெட்ட வெளிச்சமாகியது. இந்த காலத்தில் ஜாதி, மதம் பார்க்கவில்லை என்று சொன்னாலும் தமிழ் நாட்டில் இன்னும் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை இந்த படத்தில் காட்டி உள்ளார்கள். இந்நிலையில் தற்போது நாடே பயங்கர பிரச்சினையில் சிக்கி உள்ளது.

-விளம்பரம்-
tweet

இதனால் சாலைகளில் வீடு இல்லாமல் வசிக்கும் மக்களுக்கு டிரஸ்ட் சார்பில் உணவளித்து வருகின்றனர். இந்நிலையில் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் சுமார் 10 ஆயிரம் ரூபாய் டிரஸ்ட்க்கு கொடுத்து உள்ளார். இன்னும் 20 ஆயிரம் ரூபாய் பணம் தேவை என்று அவர் மக்களிடம் கோரிக்கை வைத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் திரௌபதி படம் தான் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறினீர்களே, அதிலிருந்து ஒரு கோடி எடுத்துக் கொடுத்து விடலாமே? என்று கிண்டலும் கேலியுமாக கூறியுள்ளார்.

இதை பார்த்த மோகன் மிகவும் கோபமடைந்து தனது டுவிட்டரில் கூறியிருப்பது, வயதில் பெரியவராக இருக்கின்றார். ஆனால், மூளை அளவு சிறியதாக உள்ளது. உதவி செய்யும் மனப்பான்மை இல்லை என்றாலும் உதவி செய்பவர்களை கிண்டலடிக்கும் மனப்பான்மை நிறைந்து உள்ளது. உதவி செய்யவில்லை என்றாலும் தயவுசெய்து உபத்திரம் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் அந்த நபரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்த படத்தில் கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, ஷீலா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு நாராயணனின் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தேவராஜ் எடிட் வேலை செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஜூப்லின் இசையமைத்து உள்ளார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது. மேலும், பதிவு திருமண ஊழல்களையும் சுட்டி காட்டி உள்ளார்கள்.

Advertisement