ஜாக்கிரதையாக இருங்க. படத்தை குப்பைனு கிண்டல் செய்த மூடர் கூடம் நவீனுக்கு திரௌபதி இயக்குனர் பதிலடி.

0
35890
naveen-mohan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் மோகன். இவர் முதன் முதலாக பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் மோகன் ‘திரௌபதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக ஷாலினியின் அண்ணன், அஜித்தின் மைத்துனன் ரிச்சர்ட் நடித்து உள்ளார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் திரையரங்கிற்கு வந்தது. இந்த படத்தில் ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஜூபின் தான் இசையமைத்து உள்ளார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது.

-விளம்பரம்-

மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளார்கள். சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி. இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது. மேலும், இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டி சமீபத்தில் தான் நடைபெற்றது. அதேசமயம் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவது போன்ற காட்சிகள் இருப்பதால் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

- Advertisement -

இப்படியெல்லாம் சொல்பவர்கள் இதற்கு முன்பு கூட பல படங்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது வெறுப்பு உண்டாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. இந்த மாதிரி பல பேர் இந்த படத்திற்கு ஆதரவாக இருந்து உள்ளார்கள். இதெல்லாம் தான் இந்த படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட் ஆக அமைந்து தியேட்டர்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் திரௌபதி படத்தின் டீசர் வெளியான போது மூடர் கூடம் படம் இயக்குனர் நவீன் அவர்கள் இந்த படம் ஒரு குப்பை என்று கூறி இருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, ஹாய் நவீன், எப்படி இருக்கீங்க? திரௌபதி படம் குறித்த உங்களுடைய கருத்தை தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன். இப்போது உங்களுடைய தவறை நீங்கள் உணர்ந்து இருப்பிர்கள் என நான் நினைக்கிறேன். கிழிந்துபோன பாராசூட்டில் பறக்காதீர்கள் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு மேல் ஜாக்கிரதையாக இருங்கள் மற்றும் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த டீவ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement