இந்த உயிர்கள் கண்ணுக்குக் தெரியவில்லையா ? திரௌபதி இயக்குனர் ஆதங்கம்.

0
776
mohan

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை, மகன் மரணம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்து இருந்த காரணத்தினால் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்ஸை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை பின்னர் அவர்களை இருவரையும் அடித்து கொலை செய்து விட்டதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. மேலும், சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளது. இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து பலரும் தங்களுடைய கருத்துகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா சமீபத்தில் இந்த சம்பவம் குறித்து ஆங்கிலத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். சுசித்ரா பதிவிட்ட அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் பாடகி சுசித்ராவிடம் சமீபத்தில் நெய்வேலி சுரங்கத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஆங்கிலத்தில் வீடியோ போடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், இதுவரை இதுகுறித்து சுசித்ரா, எந்த வீடீயோவையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இயக்குனர் மோகன் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், NLC Boiler விபத்து பற்றி யாரும் பேச மறுப்பது ஏன் என்று தெரியவில்லை.. கருகிய உயிர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என்று குறிப்பிட்டுள்ளார் மோகன்.

-விளம்பரம்-
Advertisement