அண்ணாத்த படம் குறித்து பதிவிட்ட மோகன், ரசிகர்களின் கமெண்ட்ஸ்ஸ பாருங்க. (இவர் போட்டா மட்டும் ஏன் இப்படி திட்றாங்க ? )

0
625
mohan
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி திருநாளான நேற்று வெளியாகி இருந்தது. ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் என்று ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு தேசிய விருது வென்ற இமான் இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்தப் படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்திசுரேஷ் நடித்திருக்கிறார் இதுவரை சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அனைத்து அஜித் படங்களுமே அன்பு, பாசம், நட்பு போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த படமும் சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் படத்தை போன்று ஒரு அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான்.

- Advertisement -

இதுபோன்ற அண்ணன் தங்கை பாச கதைகள் தமிழ் சினிமாவில் 100 முறைக்கு மேல் வெளியாகி இருந்திருக்கும். அதேபோல தர்பார் படத்தின் பெரும் தோல்விக்கு பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி இருக்கிறது. இதனால் விமர்சகர்களும் ரசிகர்களும் இந்த படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படத்தை இயக்கிய ஜி மோகன், அண்ணதா படம் குறித்து விமர்சனம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், அண்ணாத்த – சூப்பர் ஸ்டாருக்காக மட்டும், விமர்சனம் ஒன்னும் இல்லை என்பதை குறித்து வகையில் எமோஜிகளை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் நீயெல்லாம் சூப்பர் ஸ்டார் படத்தை விமர்சனம் செய்றயா என்று கேட்டு வருகின்றனர். மேலும், ஜெய் பீம் படம் பற்றி வாயே திறக்கலையே என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement