பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் வெளியான ‘திரௌபதி’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் இயக்குனர் மோகன் குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக காண்பித்துவிட்டார் என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தது. மேலும், இவர் தான் சமூதாயத்தற்க்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மோகன் பா ம க கட்சி தலைவர் ராமதாஸ் ஜாதியை சேர்ந்தவர். இதனாலேயே அவர் ராமதாசுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று கூட விமர்சங்கள் எழுந்தது.
இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பா ம க கட்சி தலைவர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு Mohan G Kshatriyan என்ற ட்விட்டர் பக்கத்தில் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பதிவு ஒன்று போடப்பட்டு இருந்தது.அதில், எங்களை அரசியல்படுத்தி ஜனநாயகப்படுத்த தவறியது மட்டுமல்லாமல் எங்களை பார்த்து மற்றவர்கள் எல்லாம் குச்சிகொளுத்திகளா மரவெட்டிகளா சாதிவெறியர்களா OBC MBC க்குள்ள இருக்கிறது கூட தெரியாத அறிவிலிகளா வன்முறையாளர்களா என பேசும் அளவிற்கு மாற்றிய மருத்துவர் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிடப்பட்டு இருந்தது.
இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும் மாடர்ன் உடையில் மாரியம்மா – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்.
ஆனால், ராமதாஸ் குறித்து இப்படி ட்வீட் போட்டது மோகன் பெயரில் இயங்கி வரும் போலி கணக்கு என்பது பின்னர் தான் தெரியவந்தது. இதுகுறித்து ட்வீட் போட்ட மோகன், இந்த மாதிரி என் பெயரை வைத்துக் கொண்டு என் சார்ந்த நல்லுறவுகளை காயப்படுத்தும் இந்த தரங்கெட்ட நபர் பெற்ற அன்னையை கூட எந்த தேவைக்கும் பயன்படுத்தி கொள்ளும் மனநிலை கொண்டவர். என்னுடைய பெயரில் எந்த பதிவு வந்தாலும் சரி பார்த்து பகிருங்கள் நண்பர்களே’ என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கும் பதில் அளித்துள்ள அந்த Fake ஐடி, டேய் பைத்தியம் நான் Fake id தான் தெளிவாக parody கணக்கு என போட்டிருக்கேன்.என் பதிவுகளில் உண்மை இருக்கும் வன்மம் இருக்காது.ஆபாச சொல்லாடல்கள் இருக்காது தரக்குறைவான விமர்சனங்கள் இருக்காது.உன்னால முடிந்ததை பாரு.சாதி வன்மம் நிறைந்த உன்னை போன்ற ஆட்களையெல்லாம் இப்படிதான் அடிக்க முடியும் என்று சவால் விட்டுள்ளார்.