ரிச்சர்ட் படத்தை முடிச்சிட்டு அவரை அணுகுகிறேன். திரௌபதி இயக்குனரின் அடுத்த ஹீரோ இவர் தானா?

0
5208
mohan
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மோகனும் ஒருவர். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீப காலமாகவே காதல், ஆக்ஷன் படங்களை விட சாதி கலவரங்கள் படங்கள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. சமூகத்தில் நிலவும் சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து உள்ளார். இந்த படத்தில் இவர்களுடன் கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, ஷீலா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு நாராயணனின் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

தேவராஜ் எடிட் வேலை செய்து இருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு ஜூப்லின் இசையமைத்து உள்ளார். திரௌபதி படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அவ்வப்போது இயக்குனர் மோகன் ஜி அவர்களும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் மோகன் அவர்களிடம் சிம்புவை படம் பண்ணுவீங்களா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதற்கு மோகன் அவர்கள் கூறியிருப்பது, சிம்புவுக்கு ஓகே என்றால், எனக்கும் ஓகே. அடுத்து நான் நடிகர் ரிச்சர்ட்டை வைத்து படம் பண்ண முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு பின்பு நான் சிம்புவை தொடர்பு கொள்கிறேன் என்று கூறினார். தற்போது இவரின் இந்த ட்விட் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையிலும், பதிவு திருமண ஊழல்களையும் சுட்டி காட்டி உள்ளார்கள். இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. மேலும், இந்த படத்தில் பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது.

இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது கிடையாது இருந்தாலும் இந்த படம் மக்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளது. அதோடு இந்த படம் பல குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்றது. இந்த காலத்தில் ஜாதி, மதம் பார்க்கவில்லை என்று சொன்னாலும் தமிழ் நாட்டில் இன்னும் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை இந்த படத்தில் காட்டி உள்ளார்கள்.

Advertisement