அடுத்த படமும் அவருடன். தனது மாமா ஸ்டைலை பின் தொடரும் திரௌபதி நாயகன் ரிச்சர்ட்.

0
19748
richard
- Advertisement -

இயக்குனர் ஜி மோகன் இயக்கத்தில் அஜித்தின் மைத்துனரும் ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் நடிப்பில் வெளியாகியுள்ள திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for richard rishi with ajith

- Advertisement -

அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.தற்போது நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியிருக்கிறார்.

திரௌபதி திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. திரௌபதி படம் வெளியாவதற்கு முன்பாக பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரிச்சர்ட்டிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில், இயக்குனருடன் பேசியபோது எனக்கு பெரிய ஹீரோக்களின் படம் வந்தால்கூட என்னுடைய அடுத்த படம் ரிச்சர்ட் உடன் தான் இருக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார் உங்கள் இருவருக்கும் உள்ள உறவைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டது அதற்கு பதில் அளித்த ரிச்சர்ட், அது எனக்கும் தெரியவில்லை எங்களுக்குள் எப்படி இப்படி ஒரு உறவு வந்தது என்று தற்போதைக்கு 5 கதை தயாராக இருக்கிறது ஒன்றின் பின் ஒன்றாக நாங்கள் அதனை செய்யவில்லை என்றாலும் என்னுடைய அடுத்த படம் கண்டிப்பாக அவருடன் தான் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

வீடியோவில் 3:15 நிமிடத்தில் பார்க்கவும்

அஜித் தான் சிறுத்தை சிவா வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் தொடர்ச்சியாக 4 படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது மாமாவின் அதே பாணியை ரிச்சர்ட் பின்பற்றியுள்ளார். மேலும், இந்த பேட்டியின் போது, உங்கள் படத்தை பார்த்துவிட்டு உங்களின் தங்கை ஷாலினி ஆகட்டும் அல்லது அஜித் ஆகட்டும் என சொல்லுவார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டதுதற்கு, எதுவும் சொல்ல மாட்டார்கள் நான் அவர்களின் படம் பார்த்தால் எதுவும் சொல்ல மாட்டேன் அதே போல என்னுடைய படங்களை பார்த்தும் அவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள் இருவரும் இணைந்து ஜாலியாக படத்தை மட்டும் பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

Advertisement