தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் சர்ச்சையான இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மோகன். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் நடிகை ஷாலினியின் தம்பியும் அஜித்தின் மச்சானுமான ரிச்சர்ட் நாயகனாக வைத்து திரௌபதி படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.
என்னதான் இவர் தொடர்ந்து அஜித் மச்சான் ரிச்சர்டை வைத்து படம் எடுத்து வந்தாலும் இவர் தீவிர தல ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். அஜித் குறித்து இவர் அடிக்கடி பல பதிவுகளை போட்டுள்ளார். அதே போல இவரது சமூக வளைதளத்தின் கவர் பிக் கூட அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் வைத்து இருக்கிறார்.
இவர் இயக்கிய ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம் நாளை (அக்டோபர் 1 ) வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகனிடம், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகன் அஜித்தை வைத்து ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டபோது அஜித்தை வைத்து நான் படம் பண்ணுவேன் என்று சொன்னது தவறு தான். அப்படி சொன்னதும் என்னை பல சிறு நரிகள் பயங்கரமாக செய்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.
வீடியோவில் 11 : 57 நிமிடத்தில் பார்க்கவும்
இப்படி தான் கடந்த ஆண்டு ஜூன் 22 விஜய் பிறந்தநாளின் போது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #HappybirthdayThalapathy என்ற ஹேஸ் டேக்கை குறிப்பிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார் என்றும் பதிவிட்டிருந்தார். மோகனின் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த ஒரு ரசிகர் அண்ணா இவர் கூட எப்ப பண்ணுவீங்க என்று கேட்டிருந்தார்.
ரசிகரின் இந்த கேள்விக்கு சீரியசாக பதித்த மோகன் அவருக்கான கதை இருக்கு காலம் கனியும் உங்கள் அன்பிற்கு நன்றி சகோ என்று தெரிவித்து இருந்தார். ஆனால், அந்த ரசிகரை டேய் நான் சும்மா கேட்டேன் டா உடனே கதை இருக்கு காலம் இருக்கு காய் கனி இருக்கு னு சொல்லிட்டு இருக்க என்று பங்கமாககலாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.