தன் மகள் போட்டோவை போடாமல் அஜித் தனது மகளுடனுன் இருக்கும் புகைப்படத்தை போட்டு கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்து சொன்ன மோகன்.

0
2724
mohan
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மோகன். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் நடிகை ஷாலினியின் தம்பியும் அஜித்தின் மச்சானுமான ரிச்சர்ட் நாயகனாக வைத்து திரௌபதி படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

என்னதான் இவர் தொடர்ந்து அஜித் மச்சான் ரிச்சர்டை வைத்து படம் எடுத்து வந்தாலும் இவர் தீவிர தல ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். அஜித் குறித்து இவர் அடிக்கடி பல பதிவுகளை போட்டுள்ளார். அந்த வகையில் இன்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு, அஜித் தனது மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், மேதினி குட்டிக்கு கிருஷ்ணன் வேஷம் போடலையா அண்ணா என்று கேடடார். அதற்கு மோகன், முடி இறக்கி இருக்கோம்ல (மொட்டை அடித்து உள்ளதாக கூறியுள்ளார்)

இதையும் பாருங்க : என்ன சிங்கப்பெண்ணே இதெல்லம் – பிகில் பட நடிகையின் போட்டோ ஷூட்டை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

திரௌபதி படம் வெளியான போதே இவரும் அஜித்தும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. மேலும், திரௌபதி படத்தின் டிரைலரை பார்த்து விட்டு டுவிட்டரில் தல அஜித் அவர்கள் இயக்குனரை அழைத்து பாராட்டினார் என்றும், தனது மச்சானுக்காக தனது ஆதரவையும் தருவதாக சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கு இந்த படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் கூறியது, இது எல்லாம் வதந்தி. இதை நம்பாதீர்கள். இது பல வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம். சினிமா உலகமும், அஜித் ரசிகர்களும் குழம்பி விடக் கூடாது என்பதற்காக தான் ட்விட்டரில் இதை பதிவிட்டு வருகிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement