மாஸ் கெட்டப்பில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் அஜித்தின் மைத்துனரும் ஷாலினியின் சகோதரரும்.!

0
9816
Shalini
- Advertisement -

தமிழ் சினிமா பிரபலங்களில் பல தம்பதியர்கள் இருந்து வந்தாலும் அஜித்- ஷாலினி ஜோடி தான் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சினியர் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி.

Image

நடிகை ஷாலினி, அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது நமக்கு தெரியும். அதே போல ஷாலினிக்கு ரிச்சர்ட் என்ற சகோதரரும் இருக்கிறார். இவர் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

அதன் பின்னர் இவர் ஹீரோவாக கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் வைரஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து. அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தும் இவரால் ஒரு வெற்றிகரமான நடிகராக வளம் வர முடியவில்லை.

This image has an empty alt attribute; its file name is richard.jpg
Image
Image

இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தமான்’ என்ற படத்தில் நடித்திருந்தார் ரிச்சர்ட். தற்போது மூன்று வருட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார் ரிச்சர்ட்.இந்த படத்திற்கு ‘ திரௌபதி’என்று தலைப்பு வைத்துள்ளனர். பழைய வண்ணார பேட்டை படத்தை இயக்கிய மோகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் நடிகர் ரிச்சர்ட்.

-விளம்பரம்-
Advertisement