பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் இயக்கத்தில் இன்று திரையரங்கிற்கு வெளிவந்து உள்ள படம் ‘திரௌபதி’. இந்த படத்தில் ரிச்சர்ட், ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தேவராஜ் எடிட் வேலை செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் தான் இசையமைக்கிறார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சமூகத்தில் நடக்கும் நாடக காதல் பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றி வெளிப்படையாக காட்டி உள்ளது. திரௌபதி–போர் வெற்றி பெற்றதா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

Advertisement

சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி. இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்து உள்ளார். இந்த படத்தில் இவர் சிலம்பம் கலைஞர். இவர் தன் மாமன் மகளான திரௌபதியை திருமணம் செய்து கொள்கிறார். இவரின் சித்தப்பா கிராமத்தில் மரியாதைக்குரிய தலைவராக இருக்கிறார். இவருக்கும்(சித்தப்பா) ஒரு மகள் உள்ளார். கிராமத்தில் அழகாக இவர்களின் வாழ்க்கை செல்கிறது.

இதையும் பாருங்க : காவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய கௌரவம். வீடியோவுடன் இதோ

Advertisement

கதாநாயகன் ரிச்சர்ட் மனைவி கிராம மக்களின் நலத்திற்காக பல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில் ஒரு குளிர்பான கம்பெனிக்கான ஒரு கும்பல் பித்தலாட்ட வேலைகளில் ஈடுபடுகிறது. இதனால் கிராமநலன் பாதிக்கப்படுகிறது. கிராம நலனை பாதிக்கும் இந்த இந்த செயலுக்கு ஊரும் திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது. இதற்கிடையில் கிராம தலைவரின் மகள் பதிவு திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வருகிறது. இதனால் கிராம தலைவர் உயிர் விடுகிறார். மற்றொரு நாள் எதிர்பாராத விதமாக திரௌபதி, அவரின் தங்கையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்படுகிறது.

Advertisement

இதற்கு முன்பே கதாநாயகன் சிறைக்கு செல்கிறார். அவர் ஏன் சிறைக்கு செல்கிறார்? அவருக்கு என்ன நடந்தது? திரௌபதியை கொலை செய்ய நினைக்கும் கும்பல் யார்? திரௌபதியை காப்பாற்றினார்களா? திரௌபதி தங்கைக்கு என்ன ஆனது? ரிச்சர்ட்ஸ் சிறையில் இருந்து வெளியே வந்து இருவரும் சேர்ந்தார்களா? சமூகத்தில் ஜாதி ஆவணக்கொலைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதா? என்று பல விஷயங்களை குறித்துப் பேசப்படுவது தான் திரௌபதி.

ரிச்சர்ட் இந்த படத்தில் ஒரு சிலம்பு கலைஞராகவும், தன் மனைவியின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவராகவும் நடித்திருக்கிறார். படத்தில் அவருடைய நடிப்பு பிரமாதமாக உள்ளது. திரௌபதி கதாபாத்திரத்தில் ஷீலா நடித்திருக்கிறார். படத்தில் தன்னுடைய நடிப்பை திறமையாக வெளிப்படுத்தி உள்ளார். கருணாஸ் இந்த படத்தில் பொதுநல வழக்கறிஞராகவும், சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதல் விஷயத்தில் நடக்கும் ஆவணக்கொலை என்னும் சாதி வெறி பிடித்த அவர்களின் முகத்திரையை கிழித்து எடுத்துள்ளார் இயக்குனர் மோகன். படத்தின் ஒளிப்பதிவு, இசை எல்லாம் நன்றாக இருந்தது.

பிளஸ்:

பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளார்கள்.

ரிச்சர், ஷீலா,கருணாஸ் ஆகியோரின் நடிப்பு இயல்பாகவே உள்ளது.

சமூகத்தில் நடக்கும் ஆவண கொலையை குறித்தும், சமூக விழிப்புணர்வு குறித்தும் கூறி உள்ளார் இயக்குனர்.

பெண் பிள்ளைகள் தைரியத்தை தெளிவாக காண்பித்துள்ளார்.

இதையும் பாருங்க : விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஷங்கர் நிதி உதவி – எவ்வளவு தெரியுமா ?

மைனஸ்:

படத்தின் நீளம் கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஒன்றரை படத்தை பார்ப்பது போல் பீல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

போலி பதிவு திருமணங்கள் குறித்து சொல்லப்படும் தீர்வை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் ஜாதியை பற்றி பேசி இருப்பார்கள். இது அந்த ஜாதி சமூகத்தினரிடம் பிரச்சினையை தூண்டும் வகையில் உள்ளது.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை

இறுதி அலசல்:

படம் முழுவதும் இல்லை என்றாலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் சாதி குறித்து பேசினாலும் நிஜத்தில் நடக்கும் ஜாதி ஆவணக்கொலைகளையும், ஜாதி வெறி பிடித்தவர்கள் பற்றியும் வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார் இயக்குனர். உண்மையாலுமே பதிவு திருமணத்தில் நடந்த ஊழல்களை மீண்டும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார். மொத்தத்தில் திரௌபதி- போர், யுத்தம், சமூக விழிப்புணர்வு.

Advertisement