காவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய கௌரவம். வீடியோவுடன் இதோ

0
2521
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட நடிப்பில் ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். இந்த வலிமை படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர்.

-விளம்பரம்-

சமீப காலமாகவே தல அஜித் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் உமா குரேஷி, நவதீப் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருவதாக சில தகவல்கள் வெளிவந்து உள்ளது.

- Advertisement -

இதையும் பாருங்க : விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஷங்கர் நிதி உதவி – எவ்வளவு தெரியுமா ?

இந்நிலையில் அஜீத் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த விசுவாசம் படத்தின் பாடலை கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் கிட்டாரில் வாசித்து உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் விசுவாசம். இந்த படத்தில் அஜீத் குமார், நயன்தாரா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் வெளியான கண்ணான கண்ணே என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. தற்போது இந்த பாடலை கேரளா காவல்துறை அதிகாரி ஒருவர் கிட்டாரில் வாசித்து அசத்தியுள்ளார். அவர் வாசிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது கேரளா காவல் துறையிடமிருந்து தல அஜித்துக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோவை தற்போது அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் வைரலாகி வருகிறார்கள்.

Advertisement