வசூல் சாதனை செய்த திரௌபதியை எந்த டிவி வாங்கியது? இயக்குனர் சொன்ன ஷாக்கிங் பதில்.

0
42978
Draupathi
- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் திரௌபதி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் பெரிய அளவு நடிகர்கள் கிடையாது, இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து உள்ளார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது.

-விளம்பரம்-

மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளார்கள். இந்நிலையில் திரெளபதி படத்தின் தொலைக்காட்சி உரிமையை எந்த நிறுவனமும் வாங்கவில்லை என்று திரௌபதி படத்தின் இயக்குனர் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளிவந்த போதே பயங்கர சர்ச்சையையும், எதிர்ப்பையும் தெரிவித்தது.

- Advertisement -

இருந்தாலும் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாகி இருந்தாலும் வசூலில் சுமார் 14 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனால் இந்த படத்தில் முதலீடு செய்த அனைவருமே மூன்று மடங்கு லாபம் பெற்றார்கள் என்று சொல்லலாம். தற்போது இந்த படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதிலும் ஆதரவு தரும்படி இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் தொலைக்காட்சி உரிமம் முடிந்துவிட்டதா? எந்த சேனல் ப்ரோ என்று இயக்குனரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு மோகன்ஜி அவர்கள் கூறியிருப்பது, யாரும் வாங்க விருப்பம் இல்லையாம் என்று பதிலளித்தார். இதன் மூலம் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை யாரும் வாங்க முன்வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், வசூல் சாதனை ஈட்டிய ஒரு படம் தொலைக்காட்சி உரிமை விற்பனை ஆகாமல் இருப்பது இது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சமூகத்தில் நிலவும் சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்று உள்ளது. இந்த படத்தில் திரையரங்கிற்கு கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, ஷீலா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
தேவராஜ் எடிட் வேலை செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் தான் இசையமைக்கிறார்.

Advertisement