திரிஷ்யம் படத்தோடு தன்னுடைய குடும்பத்தை ஒப்பிட்டு வரும் நெட்டிசன்கள் – இயக்குனர் அளித்த விளக்கம்.

0
6365
jeethu

திரிஷ்யம் படத்தோடு தன் தனிப்பட்ட வாழ்க்கையை ஒப்பிட்டு வரும் மீம் குறித்து திரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கமளித்துள்ளார். சினிமாவுலகில் மிக பிரபல இயக்குனரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரிஷ்யம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பேபி எஸ்தர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என 4 மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திரிஷ்யம் 2’ படம் உருவாகியுள்ளது. படத்திலும் அதே 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடக்கும் கதையுடன் தான் துவங்குகிறது இந்த படம். சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இவர்களின் மூத்த மகள் அன்ஸிபா, முன்பு நடந்த கொலை சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார். 

- Advertisement -

மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர். இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீஸுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால்.இறுதியில் போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டனர்? இறுதியில் மோகன் லால் குடும்பம் தப்பித்ததா இல்லையா என்பது தான் கதை.

இந்த பொதுவாக இரண்டாம் பாகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம். முதல் பாகத்தில் இருந்த அதே சுவாரசியமும் விறுவிறுப்பும் இந்த படத்திலும் குறையவில்லை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தமிழ் ரசிகர்களும் கண்டு பாராட்டி வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனராக ஜீத்து ஜோசபின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

-விளம்பரம்-

திரிஷ்யம் படத்தில் வருவது போலவே ஜீத்து ஜோசபின் குடும்பத்திலும் இரண்டு மகள் இருப்பதை கண்டு திரிஷ்யம் படத்தில் நடப்பதை போல இயக்குனரின் நிஜ வாழ்வில் நடந்து இருக்கிறது அதையே அவர் படமாக எடுத்துவிட்டார் என்று பல மீம்கள் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜீத்து ஜோசப், நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக மாறுவதற்கு முன்பு, நான் ஒரு ரப்பர் தோட்டக்காரர். நான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன். எனது தந்தை அரசியல்வாதி. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார், நான் ஒரு கிராம பின்னணியில் இருந்து வந்தவன் . எனக்கு மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி இதில் நான் மட்டுமே வேலை செய்கிறேன். எனவே எனக்கு அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement