குடிபோதையில் பாம்பை விழுங்கிய ஆசாமி..! வைரலாகும் வீடியோ.!

0
160
man

குடிபோதையில் சாலை விபத்தில் சிக்கியோ, தண்ணீரில் மூழ்கியோ உயிரழந்தவர்களை பற்றி தான் நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், போதை தலைக்கு ஏறி உயிருள்ள விஷப்பாம்பை விழுங்கிய தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகிபால் சிங் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் குடி போதையில் சாலையில் கிடந்த சிறு பாம்பை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரிடம் கையால் பிடி, பாம்பின் வாலை பிடி என்று கூற அதன்படியே செய்துள்ளார் மகிபால் சிங் .

பின்னர் பாம்பை வாயில போடு பார்ப்போம் என்று யாரோ சிலர் சொல்ல, போதையில் இருந்த மகிபால் சிங் பாம்பை அப்படியே வாய்க்குள் போட்டுள்ளார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாந்தி எடுத்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அங்குள்ளவர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.