‘உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லாயா’ – நேற்று வெளியான Dsp படத்துக்கு இன்று படக்குழு செய்த அலப்பறையால் கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
570
dsp
- Advertisement -

விஜய் சேதுபதியின் DSP படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

-விளம்பரம்-

இவர் என்றென்றும் மக்களின் செல்வனாக திகழ்ந்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் கமல், பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருந்தது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள்.

விஜய் சேதுபதி நடித்த படங்கள்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். இதனை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மாமனிதன் படத்தில் விஜய் சமீபத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் டிஎஸ்பி.

-விளம்பரம்-

படத்தின் வெற்றி விழா:

இயக்குனர் பொன் ராம் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அனு கீர்த்தி, குக் வித் கோமாளி புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைத்து இருக்கிறார். படத்தில் வாஸ்கோடகாமா என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவை பட குழுவினர் கொண்டாடியிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

அதாவது, பொன்ராம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சீமராஜா, எம்ஜிஆர் மகன் போன்ற படங்களெல்லாம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த dsp படமும் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. பொதுவாக 50 அல்லது 100வது நாளில் தான் வெற்றிவிழா கொண்டாடுவார்கள். இப்படி ரசிகர்கள் வரவேற்பே இல்லாத படத்திற்கு ஒரே நாளில் வெற்றி விழா கொண்டாடிய dsp படக்குழுவை பலரும் மனசாட்சி இல்லையா என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisement