18 வயதில் ஆசைப்பட்டும், இன்று அடி எடுத்து வைக்கிறோம் – ரசிகர்களுக்கு பிரியா பவானி சங்கர் சொன்ன குட் நியூஸ்.

0
761
priya
- Advertisement -

புது வீடு கட்டி குடியேறிக்கும் பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதன் பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார் ப்ரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் திரைப்பயணம்:

இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பின் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’. இதனை அடுத்து சமீபத்தில் அருண் விஜய்- ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் யானை. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள்:

தற்போது ப்ரியா பவானி சங்கர் அவர்கள் குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், மற்றும் இந்தியன் 2 போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனிடையே பிரியா பவானி சங்கர் அவர்கள் ராஜவேல் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வருவது அனைவரும் அறிந்து ஒன்று. இவர்கள் இருவருமே கல்லூரியில் படிக்கும் போது இருந்தே காதலித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிரியா பவானி சங்கர் போஸ்ட்:

இவர்களுடைய புகைப்படங்கள் எல்லாமே சோசியல் மீடியாவிலும் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ப்ரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலனுடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் அதில் அவர் சில வரிகளையும் எழுதி இருந்தார். இதை பார்த்து பலருமே இவர்கள் இருவருக்கும் தான் திருமணம் நடைபெற இருப்பதாக நினைத்து வாழ்த்துக்களை சொன்னார்கள்.

பிரியா பவானி சங்கர் புது வீடு:

ஆனால், அதற்கு பின்பு பிரியா பவானி சங்கர் தான் எழுதிய வரிகளை மாற்றி 18 வயதான நாங்கள் கடற்கரையில் ஒரு இடத்தில், எங்கள் மாலைப் பொழுதைக் கடலில் எழும் சந்திரனைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். இங்கே நாங்கள் எங்கள் புதிய வீட்டிற்கு அடியெடுத்து வைக்கிறோம்’ என்று கூறியிருந்தார். அதாவது, தற்போது பிரியா பவானி சங்கர் அவர்கள் கடற்கரை ஓரமாக ஒரு வீடு ஒன்று கட்டி வருவதாக ஏற்கனவே செய்திகள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அந்த வீட்டுக்கு தான் தற்போது பிரியா பவானி சங்கர் அவர்கள் குடி சென்றிருக்கிறார். கனவு நிறைவேறிவிட்டதாக அவர் அந்த பதிவில் கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே ப்ரியா பவானி சங்கருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Advertisement