தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கும் டியூட், பைசன், டீசல் ஆகிய மூன்று படங்களின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டியூட். இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜி, சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
டீசல் படம்:
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டீசல். இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய்குமார், சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மீனவ மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, கச்சா எண்ணெய்யை வைத்து நடக்கும் அரசியல், மீன் பிடிப்பதில் ஏற்படும் பிரச்சனை என பல விஷயங்களை இயக்குனர் படத்தில் சொல்லி இருக்கிறார். தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

படத்தின் வசூல்:
இப்படி இருக்கும் நிலையில் மூன்று படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விபரம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டீசல், டியூட், பைசன் ஆகிய மூன்று படங்களுமே ஒரே நாளில் வெளியாகியிருக்கிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் டியூட் படம் 5.3 கோடி வசூலைவாரி குவித்து இருக்கிறது. மற்ற இரண்டு படங்களை விட அதிக வசூலை வாரி டியூட் தான் முதலிடத்தில் உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படம் தமிழ்நாட்டில் மட்டும் 2.52 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதை அடுத்து முதல் நாளில் மட்டும் டீசல் படம் 24.5 லட்சம் தான் வசூல் செய்திருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் டீசல் படம் தான் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. விடுமுறை நாட்கள் என்பதால் இனிவரும் நாட்களில் இந்த மூன்று படங்களின் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






