தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் துல்கர் சல்மான். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் காந்தா. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீபோஸ், ராணா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் செல்வா இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் தமிழகமே கொண்டாடும் ஒரு நாயகனாக துல்கர் சல்மான் இருக்கிறார். அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததே சமுத்திரக்கனி தான். ஆனால், தன்னுடைய சிஷ்யன் துல்கர் சல்மானுடைய புகழ் தன்னை விட உயர்ந்ததாக இருப்பதால் சமுத்திரகனி பொறாமைப்படுகிறார். அந்த நேரத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் துல்கர் நடிக்கிறார். அந்த படத்தில் துல்கர் இறப்பது போல காட்சிகள் வருகிறது. இது வேண்டாம் என்று துல்கர் சொல்கிறார். ஆனால், சமுத்திரக்கனி கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே ஈகோ முட்டி படம் நின்று போகிறது.
பின் அந்த ஸ்டுடியோவை இழுத்து மூடுகிற நிலைமை வருகிறது. அதற்காக அந்தப் படத்தை எடுக்க இருவருமே சம்மதிக்கிறார்கள். துல்கரை போலவே பாக்கியஸ்ரீபோஸையும் சமுத்திரக்கனி தான் உருவாக்குகிறார். ஆனால், அவர் மீது காதலில் விழ அதைத்தொடர்ந்து எல்லோர் வாழ்வும் திருப்பி போடும் அளவுக்கு பல சம்பவங்கள் அடங்கியிருக்கிறது. பின் பாக்கியஸ்ரீ கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை யார் செய்தார்கள்? துல்கர் சல்மான் என்ன ஆனார்? சமுத்திரக்கனி தன்னுடைய உச்சத்தை அடைந்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

துல்கர் சல்மான் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அது கண்டிப்பாக எல்லோர் கவனத்தில் ஈர்க்கும். காரணம், அவர் ஒவ்வொரு கதையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த வகையில் காந்தாவிலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் அந்த கதாபாத்திரத்தை நேசித்திருக்கிறார். இவரை அடுத்து சமுத்திரக்கனி தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் பாதி முழுவதும் சாந்தா காந்தாவாக மாறி எப்படி போகிறது என்பதை காட்சிகளாக கொடுக்கிறார்கள். முதல் பாதி மெதுவாக நகர்கிறது. இருந்தாலுமே சுவாரசியம் குறையவில்லை. இடைவெளிக்கு பிறகு கொலை, ராணா விசாரணை என்று படம் சூடி பிடித்தாலும் விறுவிறுப்பு கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இரண்டாம் பாதியில் சுவாரசியம் இல்லை. கிளைமாக்ஸில் அனைவருடைய எமோஷனல் காட்சிகளும் தூள் கிளப்பி இருக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலமே செட் வொர்க், ஒளிப்பதிவு, இசை தான். குறிப்பாக படத்தின் வசனங்கள் எல்லாம் ரசிக்கும் வகையில் இருக்கு. மொத்தத்தில் காந்தா எல்லோரும் சென்று பார்க்கும் ஒரு நல்ல படமாக தான் இருக்கிறது.
நிறை:
துல்கர் சல்மான், சமுத்திரக்கனி நடிப்பு அருமை
நடிகர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
டெக்னிக்கல் வொர்க் நன்றாக இருக்கிறது,
முதல் பாதி அருமை
கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக இருக்கிறது.
வசனங்கள் நன்றாக இருக்கிறது

குறை:
இரண்டாம் பாதியில் சுவாரசியம் இல்லை
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் காந்தா - கலை படைப்பு






