2008ல் நடந்த விவகாரம், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு- பின்னணி என்ன ?

0
1574
Ponmudi
- Advertisement -

திமுக துணை பொது பொதுச் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாநில உயர்கல்வித்துறை அமைச்சரும், திமுக துணை பொது செயலாளராக இருப்பவர் பொன்முடி. இவருடைய வீட்டில் தான் இன்று காலை அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள இவர் வீட்டில் மட்டுமில்லாமல் விழுப்புரத்தில் உள்ள இவருடைய இன்னொரு வீட்டிலும் சோதனை நடத்தி இருக்கிறார்கள். இதை அடுத்து அமைச்சர் பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கௌதம சிகாமணி. தற்போது இவருடைய வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்திருக்கிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் இதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

திமுக அமைச்சர் வீட்டில் சோதனை:

இந்த நிலையில் இந்த சோதனை எதற்கு? ஏன்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, 2008 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்ட விரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி பங்குகளை வாங்கி இருக்கிறார். இது ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இன்றி வெளிநாட்டு பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்.

சட்டவிரோத முதலீடு:

பின் ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வாங்கியும் அவர் முதலீடு செய்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டில் தான் இந்த மோசடி நடந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது திமுக ஆட்சி தான் இருந்தது. பொன்முடி அவர்கள் மாநில உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது. அப்போது கௌதம சிகாமணியின் 8.60 கோடி மதிப்புள்ள சொத்துக்களை 2020 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை முடக்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

பின் திடீரென்று இன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரைடு நடத்தி இருக்கிறார்கள். இந்த சோதனைக்கு பின்னணி 2008 ஆம் ஆண்டு நடந்த விவகாரம் தான் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணி இடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Advertisement