தன்னை சந்தித்த போது விஜய் இதை சொன்னார் – மனம் திறந்த முதல்வர். ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த SelflessActorVIJAY ஹேஷ் டேக்.

0
1718
Vijay
- Advertisement -

தன்னை விஜய் சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி சில மணி நேரத்தில் டீவ்வ்ட்டரில் #SelflessActorVIJAY என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் மாநகரம் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் அர்ஜுன் தாஸ் மாஸ்டர் மகேந்திரன் சாந்தனு சஞ்சீவ் ஸ்ரீமன் ஸ்ரீநாத் என்று எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போதும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில் கருணா பிரச்சினை காரணமாக இந்த திரைப்படத்தின் வெளியீடு தடைபட்டு போனது.

கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது.ஆனால், மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை Ott யில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் ரசிகர்களும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல கோடிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டால் வசூலில் நிச்சயம் துண்டு விழும் என்று பலரும் கருதுகின்றனர்.

இதையும் பாருங்க : கோட் ஷூட், ஸ்டைலான ஹேர் ஸ்டைல் – புத்தாண்டில் வேற லெவல் Transformation-ல் நடிகை வையாபுரி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திரையரங்குகளில் தற்போது 50 சதவீதமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதை, 100 சதவீதமாக மாற்ற வேண்டி அவர் கோரிக்கை வைத்தாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. 

ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்துருக்காங்க. நிறைய பேருக்கு நஷ்டம் ஆகிட்டு இருக்கு. அந்த எல்லா படத்தையும் கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என விஜய் கேட்டுக்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். தன்னுடைய படத்தை பற்றி மட்டும் யோசிக்காமல் நடிகர் விஜய் மற்றவர்களை பற்றியும் யோசித்துள்ளது பலரின் பாராட்டுகளை பெற்றுவருகிறது. மேலும், ட்விட்டரில் SelflessActorVIJAY என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement