மேடையில் பாடிக்கொண்டு இருக்கும் போதே சுருண்டு விழுந்து இறந்த பிரபல பாடகர் – அதிர்ச்சியில் சினிமா உலகம்.

0
480
edawa
- Advertisement -

பின்னணி பாடகர் எடவா பஷீர் பாடும் போதே மேடையில் உயிரிழந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவின் வர்கலை பகுதியருகே எடவா என்ற இடத்தில் பிறந்தவர் பஷீர். ஜேசுதாஸ் மற்றும் ரபி ஆகியோரின் பாடல்களை கேட்டு தொடக்க காலத்தில் பயிற்சி பெற்று வந்தவர் எடவா பஷீர். பின் இவர் பள்ளி, கல்லூரியில் பல பரிசுகளை பெற்றிருக்கிறார்.

-விளம்பரம்-

அதன்பின் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து அனைத்து கேரள இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இருந்தார். அதோடு அதன் தலைவராக எடவா பஷீர் செயல்பட்டு இருந்தார். அதன் பின் இவர் பல இசைக் கச்சேரிகளில் பாடி இருக்கிறார். மேலும், கே.ஜே.ஜாய் இசையமைப்பில் ரகுவம்சம் என்ற திரைப்படத்தில் படத்தின் மூலம் தான் எடவா பஷீர் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் இவர் வீண வாய்க்கும் என்ற பாடலை பாடியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் இவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடன் சேர்ந்து முக்குவனே சினேகிச்ச பூதம் என்ற படத்தில் இடம் பெற்ற ஆழித்திர மலகள் அழகின்டே மலகள் என்று பாடலை பாடி இருந்தார்.

இந்த பாடல் ரசிகர்களிடம் மிக பிரபலம் அடைந்தது. இதனிடையே இவருக்கு ரஷீடா மற்றும் ரெஹ்னா என்ற இரு மனைவிகளும், உல்லாஸ், உமேஷ், உஷுஸ் சீட்டா, பீமா ஆகிய மகன்கள், மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழாவில் நடந்த ‘ப்ளூ டைமண்ட்ஸ்’ என்ற இசைக்குழுவின் 50 ஆம் ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டத்துக்கான இசை நிகழ்ச்சியில் எடவா பஷீரும் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடலான ‘மானா ஹோ தம்’ எனும் பாடலை மேடையில் இவர் பாடி கொண்டிருந்தபோதே திடீரென சரிந்து விழுந்து இருக்கிறார். பின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவருக்கு எழுபத்தி எட்டு வயது தான் ஆகிறது. இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement