படம் பார்த்த பின் விஜய் என்ன கூறினார் ! மெர்சல், தெரி, விவேகம் Editor ரூபன் !

0
1954
editor-ruben

மெர்சல் படத்தில் உங்கள் எடிட்டிங்யை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்?
இந்தப் படத்தின் ஆடியோ லான்சின் போதுதான் விஜய்யை பார்த்தேன். அப்போதே என்னைப் பாராட்டினார். படத்தின் டீசர் வெளியான உடன் என்னைக் கூப்பிட்டு நல்லாயிருக்குனு சொன்னார்.
Editor Ruben‘தெறி’ படத்துக்காக எனக்கு இருந்த நேரம் ‘மெர்சல்‘ படத்துக்காக இல்லை. அதனால், மெர்சல் டீசர் மூன்று மணி நேரத்திலேயே ரெடி பண்ணினேன். டீசருக்கு ரொம்ப மெனக்கெட்டேன். டீசர் பார்த்தவுடன் விஜய் சாருக்கு ரொம்ப பிடித்திருந்தது.

இந்தப் படத்தின் நீளம் எடிட்டிங் செய்யும் போது இதைவிட அதிகமாகவே இருந்தது. அதை எல்லாம் சுருக்கி படத்துக்குத் தேவையான விஷயங்களை மட்டும்தான் கொடுத்தோம்.மாஸ் ஹீரோ படத்துக்காக சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் இந்தப் படத்தில் ஆக்டர்ஸ், காமெடியன்ஸ் என எல்லோரும் பெரிய ஆட்கள். எல்லோருக்கும் சமமான இடம் கொடுக்கணும். படத்திலும் நிறைய எமோஷன்ஸ் இருக்கு. அதனால் எல்லோவற்றையும் சேர்த்துக் கொடுக்கும் போது டைம் எடுக்கத்தான் செய்யும்.
Editor Rubenமெர்சல் படத்தின் எடிட்டிங் போது எந்த இடத்திலாவது எமோஷனல் ஆகியிருக்கீங்களா?
நிறையவே. பேஸிக்காகவே நான் ரொம்ப எமோஷனல் டைப். அதனால், இந்தப் படத்தின் எடிட்டிங் போது அந்த அனுபவம் நிறையவே இருந்தது. ப்ளாஷ்பேக் காட்சியை எடிட்டிங் செய்யும் போது என்னையே அறியாமல் எமோஷனல் ஆகி விட்டேன். கண்ணீல் இருந்து கண்ணீர் வந்து கொண்டேதான் இருந்தது. அட்லி படத்தில் எப்போதும் எமோஷனலுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இந்தப் படத்தில் கேட்கவே வேண்டாம்

ட்விட்டரில் ‘மெர்சல்’ படத்துக்கு நான்தான் டா எடிட்டர் அப்படினு போட்டியிருந்த ட்விட் பற்றி?
அந்த ட்விட் கொஞ்சம் காமெடி டோனில்தான் போட்டிருந்தேன். அவங்க அவங்க வேலையை அவங்க பார்த்தால்தான் நன்றாகயிருக்கும். என் படத்துக்கு நான் தானே எடிட்டர். வரவங்க போறவங்க எல்லாம் எடிட் பண்ணிட்டு போறதுக்கு என் வேலை சும்மாயில்லை. இதற்காக முறையாக நான் பயிற்சி எடுத்து, படித்து, இத்தனை வருடம் உதவி எடிட்டராகஇருந்து வந்திருக்கின்றேன். என் படத்தை என்னை எடிட் செய்ய விடவில்லை என்றால் எப்படி.