ஏழை மாணவர்களுக்கு இலட்சக்கணக்கில் நடிகர் ரஜினிகாந்த் கல்வி கட்டணம் செலுத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவருடைய நடிப்பில் வெளிவந்திருக்கும் எல்லா படமுமே மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

இவர் நடிகர் என்பதை தாண்டி நல்ல உள்ளம், நல்ல மனிதர். இவர் செய்யும் பல உதவிகள் பலரும் அறியாத ஒன்று. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளை மூலமாக கல்லூரி பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 மாணவர்களுக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் கல்வி தொகையை ரஜினி அவர்கள் கட்டியிருக்கிறார்.
ரஜினி செய்த உதவி :
இதற்காக ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள். அதில் அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு மட்டும் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயும், குறைந்த பட்சமாக ஒரு மாணவருக்கு 34,000 என்று மொத்தம் 17 பேருக்கு கல்வி கட்டணம் செலுத்தி இருக்கிறார். மேலும், இது தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரஜினி ரசிகர் மன்றம் அறிக்கை:
அதில், நமது அன்பு தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க மத்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மற்றும் வழிகாட்டுதல் படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டணம் நேரடியாக அவர்களின் கல்லூரி வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் பரிந்துரையை ஏற்று அனைவருக்கும் கல்வி கட்டணம் வழங்கிய தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
ரஜினி திரைப்பயணம்:
தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி நடித்து இருந்தார். இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராப், சிவ ராஜ்குமார், விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர். அதோடு இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் படம் செய்து இருந்தது.

ரஜினி நடிக்கும் படம்:
மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்தது. இதை அடுத்து ரஜினியின் ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.






