‘லோகேஷ் மட்டும் இத பாக்க கூடாது’ – விக்ரம் பட சீனை கண்டம் செய்துள்ள விஜய் டிவி சீரியல். புலம்பி தள்ளி வரும் ரசிகர்கள்.

0
368
vikram
- Advertisement -

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் விக்ரம் படத்தின் பாடலை பயன்படுத்தி இருப்பதற்கு ரசிகர்கள் கிண்டல் செய்து வரும் கமெண்ட்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விக்ரம்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் பாருங்க : இத்தனை கோடி வசூல்னு பொய் சொல்ல சொன்னார் சிம்பு, முடியாதுனு சொன்னதும் சக்ஸஸ் மீட்டுக்கு வரல – பிரபலம் சொன்ன ஷாக்கிங் உண்மை.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். மேலும், இந்த படம் இதுவரை சுமார் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் பாடலை ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பயன்படுத்தி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ஈரமான ரோஜாவே :

அதாவது, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் தொடர் ஈரமான ரோஜாவே 2. ஏற்கனவே ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா,ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறர்கள்.

-விளம்பரம்-

ஈரமான ரோஜாவே 2 சீரியல் கதை:

இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது சீரியலில் பார்த்திபன் தன்னுடைய மனைவி காவியாவை தேர்வு எழுதுவதற்காக பெங்களூர் கூட்டி செல்கிறார். அப்போது அங்கு அரசியல்வாதிகளின் கலவரத்தால் போராட்டம் நடக்கிறது. இருந்தும் வேறு ஒரு காரை வரவைத்து பார்த்திபன், காவ்யா உடன் செல்கிறார். பின் செல்லும் வழியில் ரவுடிகள் வழி மறைக்கிறார்கள்.

கிண்டலுக்குள்ளான சீரியல்:

உடனே அவர் என்னுடைய மனைவி தூங்கிக் கொண்டிருக்கிறாள், சத்தம் வேண்டாம் மெதுவாக சண்டை போடுங்க என்று சொல்லி அவர்களை அடிக்கிறார். இந்நிலையில் அந்த சண்டைக் காட்சியில் விக்ரம் படத்தின் போர் கொண்ட சிங்கம் படத்தின் பாடலை பயன்படுத்துகிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், இது Eagle is dying da என்றும் தயவுசெய்து லோகேஷ் இதை பார்க்க வேண்டாம் என்றெல்லாம் கிண்டல் கேலி செய்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement