இத்தனை கோடி வசூல்னு பொய் சொல்ல சொன்னார் சிம்பு, முடியாதுனு சொன்னதும் சக்ஸஸ் மீட்டுக்கு வரல – பிரபலம் சொன்ன ஷாக்கிங் உண்மை.

0
590
maanadu
- Advertisement -

மாநாடு படத்தின் சக்சஸ் மீட்டுக்கு சிம்பு வராததற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாகவே இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தர். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

மாநாடு படம்:

யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் மிரட்டி இருந்தார்கள். ஒரு புத்தம் புதிய வித்தியாசமான கதைக்களத்துடன் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு. எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான டைம் லூப் கான்செப்ட்டை கொண்டு படமாக்கியிருந்தார். மேலும், திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது.

திருப்பூர் சுப்ரமணியம் அளித்த பேட்டி:

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் மாநாடு படம் குறித்தும், சிம்பு குறித்தும்திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் அந்த படத்தின் சக்சஸ் மீட் டுக்கு என்னை அழைத்திருந்தார். அந்த படத்திற்காக நான் நிறைய உதவி செய்து இருக்கிறேன்.

-விளம்பரம்-

மாநாடு படம் குறித்து சொன்னது:

அப்போது அவர், நடிகர் சிம்பு என்னிடம் போன் பண்ணி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று சொல்ல சொன்னார். உடனே நான், எவ்வளவு இதுவரை எவ்வளவு வசூல் ஆகி இருக்கிறது என்று கேட்டேன்? அதற்கு அவர், 71 கோடி தான் என்று சொன்னார். பொய் சொல்லவேண்டாம், அதே சொல்லுங்கள் என்று சொன்னதற்கு 100 கோடி ரூபாய் என்று சொன்னால் தான் சிம்பு வருவேன் என்று சொல்லி இருந்ததாக தயாரிப்பாளர் சொன்னார்.

சிம்பு குறித்து சொன்னது:

பின் சிம்பு அந்த வெற்றி விழாவிற்கு வரவில்லை. மாநாடு படம் சிம்புவால் மட்டும் வெற்றிபெறவில்லை. இந்த படத்திற்கு முன்பு சிம்பு நடித்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்திருந்தது. இந்த மாநாடு படம் வெற்றி பெற்றதற்கு படத்தின் இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் தான். சிம்பு மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. நான் சிம்புவை மட்டும் குறிப்பிடவில்லை. சினிமா உலகில் உள்ள டாப் 10 நடிகர்கள் எல்லாருமே தான் சொல்கிறேன். ஒரு படம் வெற்றி என்றால் அவர்களால் மட்டுமே படம் வெற்றியடையவில்லை. படத்தின் வெற்றிக்கு அவர்கள் காரணமில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement