இப்படி அடிக்கடி அழ வச்சி அவருக்கு எதாவது ஆகிட போது – ரசிகர் போட்ட கமண்ட், கேப்ரில்லா கொடுத்த பதில்.

0
645
gabe
- Advertisement -

ஈரமான ரோஜாவே தொடரில் தனது எமோஷனல் நடிப்பு குறித்து கமன்ட் செய்த ரசிகருக்கு கேப்ரில்லா பதில் கொடுத்துள்ளார். சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கேப்ரில்லா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா சார்ல்டன். இவர் விஜய் தொலைக்காட்சி மூலம் தான் மக்களுக்கு பரிச்சியமானார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிகம் ஆர்வம்.இதனால் இவர் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். பின் நிகழ்ச்சியில் இவர் டைட்டில் பட்டத்தையும் வென்று இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவருக்கு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் நடித்தார். பின் தனுஷின் 3 உட்பட சில படங்களில் நடித்து இருந்தார் கேப்ரில்லா.சின்னத்திரை பிரபலத்தினால் கேப்ரில்லாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்தும் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட கேபி 5 லட்ச ருபாய் பணத்துடன் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரில்லா சின்னத்திரையில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று இருந்தார். அதிலும் இவர் BB ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்குபெற்று இருந்தார். தற்போது இவர் ஈரமான ரோஜாவே 2வில் நடித்து வருகிறார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் தொடர் தான் ஈரமான ரோஜாவே 2.

ஏற்கனவே, ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி என பல நடிகர்கள் நடிக்கிறர்கள்.இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை பல திருப்பங்களுடன்,விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் காவியா கதாபாத்திரத்தின் மூலம் கேப்ரில்லா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக இவர் சீரியலில் அடிக்கடி அழுகாட்சியில் நடிக்கும் காட்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. அதனை கண்ட ரசிகர் ஒருவர ‘இது மாதிரி காட்சிகளை எடுப்பதை கொஞ்சமாவது நிறுத்துங்கள். கிளிசரின் கூட போடாமல் இவர் இப்படி நடிப்பது அவரது உடல் நலத்தையும் பாதிக்கும். அவருக்கு கொஞ்சமாவது பிரேக் கொடுங்கள்.

இவரது கடின உழைப்பு தேவையில்லாத காட்சிகளுக்கு எல்லாம் வீணாக போகிறது’ என்று பதிவிட்டுள்ளார். அந்த ரசிகரின் அந்த பதிவை கண்ட கேப் ரில்லா ‘முதலில் இது என்னுடைய வேலை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன், அது எனது உடல்நிலையை பாதித்தாலும் கதைக்கு அது தேவைப்படலாம். ஆனால் என்னைத் தொட்டது என்னவென்றால், நான் செய்யும் வேலைக்கு உங்கள் அங்கீகாரமும் அக்கறையும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement