இரண்டாம் கணவருக்கு இரண்டாம் திருமணம் – போலீசில் புகார் அளித்த ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை.

0
12191
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போதெல்லாம் மக்கள் வெள்ளித்திரை நோக்கி செல்வதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சிறியவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியல் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு தற்போது சீரியல்கள் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய டிஆர்பிக்காக புதுப்புது வித்தியாசத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் மிக பிரபலமான சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.இந்த சீரியலில் பவித்ரா, திரவியம் ஜோடி மலர்,வெற்றி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.இந்த ஜோடிகளுக்காகவே சீரியல் பார்க்கிற ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அதே போல இந்த சீரியலில் தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷீலா.

- Advertisement -

நடிகை ஷீலா சீரியலில் மட்டுமல்லாமல் கண்ணே கலைமானே, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ஈரமானே ரோஜாவே சீரியல் தான். இப்படி ஒரு நிலையில் நடிகை ஷீலா தனது இரண்டாவது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ஷீலாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் 5 வருடத்திற்கு முன்பாக சமூக வலைதளத்தின் மூலமாக பழக்கமான சௌந்தர்ராஜனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான கொஞ்சம் காலத்தில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட பிரிந்து வளந்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் சௌந்தர்ராஜனுக்கு இரண்டாம் திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த ஷீலா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement