என்னால இந்த கேட்ட பழக்கத்தை மாத்திக்க முடியல.! எமி ஜாக்சன் ஓபன் டாக்

0
106
amy-jakson
- Advertisement -

நடிகை எமி ஜாக்சன், பிரிட்டிஷ் மாடல் அழகியான இவர் ஆர்யா நடித்த “மதராசபட்டணம்” என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். பின்னர் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், தற்போது சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

emijack

படங்களில் நடிப்பதற்கு முன்னாள் மாடலிங் துறையில் இருந்த இவர், தற்போதும் மாடலிங் துறையில் இருந்து வருகிறார்.எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை எமிஜாக்சன் தனது அன்றாட நடவடிக்கைகளை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

- Advertisement -

மாடல் அழகியான இவர் தனது உடல் மீது எப்போதும் அக்கறை கொண்டு வருகிறார். அதனால் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். இருப்பினும் தனக்கு இருக்கும் கேட்ட பழக்கத்தை விட ஒரு புதிய முயற்சியை எடுக்க ஆரம்பித்துள்ளாராம்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் எமி ஜாக்சன் “நான் சைவமாக மாறிவிட வேண்டும் என்று பல நாட்களாக எண்ணி வருகிறேன். ஆனால், அடிக்கடி கேட்டபழக்கத்தில்(சாக்லேட்) விழுந்து விடுகிறேன். இந்த முறை நான் முடிவெடுத்துவிடடேன். தொடர்ந்து 21 நாட்கள் கடைபிடித்தால் அது பழக்கமாக மாறிவிடும். இந்த சவாலை என்னுடன் சேர்ந்து செய்யப்போவது யார். ? உங்களுக்கு ஆதாயமாக உள்ள எந்த ஒரு விடயமாகும் இருக்கலாம்.”‘ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement