இந்த காமெடியில் வந்த இந்த நடிகர் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா ? – அவரின் தற்போதைய நிலை. லேட்டஸ்ட் பேட்டி இதோ.

0
668
Jayakumar
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் ஒரு டயலாக் மூலம் பிரபலமான எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். அப்படி பிரபலமான பல நடிகர்கள் அதற்கு பின் என்ன ஆனார்கள்? என்றே தெரியவில்லை. அந்த வகையில் ஒரு வரி டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஜெயக்குமார். இவர் வடிவேலுவை பார்த்து வருங்கால அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்வார். அந்த டயலாக் மூலம் தான் நடிகர் ஜெயக்குமார் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களிலும் நடித்திருந்தார். இருந்தாலும் அவரை பிரபலமாக்கியது அமெரிக்க ஜனாதிபதி என்ற டயலாக் தான். சினிமாவில் பல கஷ்டப்பட்டு பிறகு தான் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

-விளம்பரம்-

பின் குடும்ப சூழ்நிலை பொருளாதாரத்தின் காரணமாக குடும்பத்தையும் சினிமாவையும் பேலன்ஸ் பண்ண முடியாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார். தற்போது இவர் ஜெனரேட்டர் மெக்கானிக்காக இருக்கிறார். இந்நிலையில் இவரை சமீபத்தில் பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது. அதில் அவர் கூறியிருப்பது, நடிகர் வடிவேலு அவருடன் நடித்த நடிகர்களையும் நன்றாக பார்த்துக் கொள்வார். அந்த அளவிற்கு நல்ல தங்கமான மனிதர். நான் சினிமாவில் கிட்டத்தட்ட 24 வருடங்கள் இருக்கிறேன். நான் முதலில் நடிகர் பாண்டியராஜன் இடம் தான் வாய்ப்பு கேட்டேன்.

- Advertisement -

வாய்ப்பு தேடி அலைந்தது:

ஆரம்பத்தில் அவர் தருகிறேன் தருகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். பிறகு ஒரு நாள் அவர் திடீரென்று அழைத்து வாய்ப்பு கொடுத்தார். ஆனால், நான் அந்த படத்தில் கொஞ்சம் சொதப்பியதால் இது சரியாக வரவில்லை அடுத்த படத்தில் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். பின் கொஞ்ச நாள் கழித்து அவர் மீண்டும் ஒரு படம் இயக்கினார். அந்த படத்தின் போது அவரிடம் நான் வாய்ப்பு கேட்டேன். அந்த படத்தில் நான் நடித்ததை பார்த்து இப்படியே வந்து நடி வாய்ப்புகள் உனக்கு கிடைக்கும் என்று சொல்லியிருந்தார். நானும் அவருடைய எல்லா படங்களிலும் போய் வாய்ப்பு கேட்பேன் அவரும் எனக்கு வாய்ப்பு தந்தார்.

முதல் முதலாக பேசிய டயலாக்:

நான் இதுக்கு முன்னாடி படத்தில் எல்லாம் வருவேன் போவேன். ஆனால், எந்த ஒரு டயலாக்கும் கிடையாது. நான் முதல் முதலாக பேசின டயலாக் என்றால் வளையலை கழட்டுங்கள் என்ற டயலாக் தான். நான் முதன் முதலாக சினிமாவில் பேசின டயலாக். அதற்கு பிறகு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும்போது எஸ்பி ராஜ்குமார் எனக்கு வாய்ப்பு தந்தார். அவர் எனக்கு தெய்வம் மாதிரி. அப்பதான் நான் ‘வருங்கால அமெரிக்க ஜனாதிபதி’ டயலாக் கிடைத்தது. அந்த டயலாக் ரொம்ப பிரபலமானது. இன்ன வரைக்கும் அந்த டயலாக் தான் என்னை மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. அதற்கு இயக்குனருக்கு தான் நன்றி சொல்லணும்.

-விளம்பரம்-

சினிமாவில் நடிக்க காரணம்:

நான் சினிமா துறையில் நுழைந்து அதற்கு காரணம் என்னவென்றால் ஜென்டில்மேன் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சங்கர் சார் காரில் வந்து இறங்கினார். எனக்கு அவர் தான் இயக்குனர் என்பது தெரியாது. ஆனால், அவருடைய காரை பார்த்து வியந்து போய் தொட்டேன். அதற்கு எல்லாம் வந்து என்னை அடிக்க வந்தார்கள். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்த காரை பார்த்து தான் எனக்கு எப்படியாவது சம்பாதித்து நம்பும் இந்த மாதிரி காரை வாங்கணும். அதற்கு சினிமாவில் நடித்தால் சம்பாதிக்கலாம் என்று யோசித்து தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன்.

நடிகர் ஜெயக்குமார் நடித்த படம்:

அப்படியே பல படங்களில் நடித்தேன். ஆனால், சரியான வருமானம் இல்லை. எனக்கு மூன்று அக்கா இருக்காங்க. அவங்களுக்கு கல்யாணம் எல்லாம் நான் தான் பண்ணி வைக்கணும். குடும்ப சூழல் ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் சினிமாவில் என்னால் தொடர முடியவில்லை. இருந்தாலும் நான் வீட்டில் இருந்தே இயக்குனர்களுக்கு வாய்ப்பு தர சொல்லி கடிதம் எல்லாம் அனுப்புவேன். இப்போ நான் இந்த ஜெனரேட்டர் மெக்கானிக் வேலையை செய்து குடும்பத்தை பார்த்துக் கொண்டு வருகிறேன். அதுமட்டும் இல்லாமல் நான் வடிவேல் சாருடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement