அட, இவங்க ஹீரோ – ஹீரோயினா நடிச்சிருக்காங்களா – இந்த இரண்டு நடிகர்கள் யார்னு தெரியுதா?

0
522
Thennavan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் தென்னவன். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இயக்கத்தின் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த என் உயிர் தோழன் என்ற படத்தின் மூலம்தான் தென்னவன் அறிமுகமாகி இருந்தார். இவரது பெயர் ரமேஷ். ரமேஷ் என்ற பெயரிலேயே என் உயிர்த் தோழன் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் தென்னவன் என பெயரை மாற்றிக் கொண்டார். இந்த படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜெமினி, விருமாண்டி, ஜேஜே, எதிரி, சண்டக்கோழி, புதுப்பேட்டை, வாகை சூடவா, சுந்தர பாண்டியன், ஜிகர்தண்டா, கத்தி சண்டை, சண்டக்கோழி 2 போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் தென்னவன் நடித்திருக்கும் என்னுயிர் தோழன் படத்தின் புகைப்படம் தான் வெளியாகியிருக்கிறது. அதில் இவருக்கு ஜோடியாக நடிகை ரமா நடித்திருந்தார். இவர் வேறு யாரும் இல்லைங்க, கார்த்தி நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரை படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்து பலரின் மனதை ஈர்த்தவர் நடிகை ரமா.

இவரும் தமிழ் சினிமாவில் ஒரு நாயகியாக அறிமுகமானவர் தான். இவரை அறிமுகம் செய்தது வேறு யாரும் கிடையாது மண்வாசனை இயக்குனர் பாரதிராஜா தான். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் ரமா.

-விளம்பரம்-

இந்த படத்தில் இடம்பெற்ற ஏ ராசாத்தி என்ற பாடல் இன்றளவும் பிரபலம் தான். இவர் 1990க்கு பின்னர் ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நாயகியாக நடிக்கவில்லை. பின்னர் 20 ஆண்டுகள் கழித்து ஜெய் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தில் நாயகியின் அம்மாவாக நடித்து சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் கனா, திருநாள், பிகில் என்று பல படங்களில் அம்மாவாக நடித்தார்.

Advertisement