மணிரத்னம் இயக்கத்தில் உருவான அஞ்சலி திரைப்படம் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு படமாகும். 1990 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் அந்த வருடத்தில் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விழாவிற்கு பரிந்துரைக்க தேர்வு செய்யப்பட்ட படம் இது. இந்த படத்தில் அர்ஜுன் என்ற சின்ன பையன் கேரக்டரில் ஒரு சிறுவன் நடித்தவர் தான் நடிகர் தருண்.

1983ஆம் ஆண்டு தெலுங்கானா மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய அப்பா சக்ரபாணி ஒரியா மொழியில் நடிகராக நடித்தவர். அம்மா ராஜா ரமணி தெலுங்கு மொழியில் நடிகையாக நடித்தவர். தன்னுடைய 11 வயதில் அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை பெற்றார் தருண்.

இதையும் பாருங்க : லாஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை.! முகம் சுழித்த சிம்புவின் நண்பரும் நடிகரும்.!

Advertisement

அதன் பின்னர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மலையாள மொழியிலும் சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருது பெற்றார். அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு ஹீரோவாக தெலுங்கு மொழியில் அறிமுகம் ஆனார்.

மேலும், தமிழில் புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18, காதல் சுகமானது போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது 36 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு 20 உனக்கு 18 படத்தில் வசீகர தோற்றத்தில் இருந்த தருண் தற்போது உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

Advertisement
Advertisement