திருமணம் முடிந்த கையோடு சீரியலுக்கு டாடா சொன்ன என்றென்றும் புன்னகை நடிகர். அவரே வெளியிட்ட தகவல்.

0
842
deepak
- Advertisement -

பொதுவாகவே சின்னத்திரை சீரியலில் இருந்து நடிகர், நடிகைகள் விலகுவது வழக்கமான ஒன்று. அதுவும் கொரோனா காலத்திலிருந்தே காரணம் இன்றி பல நடிகர்கள் விலகி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது என்றென்றும் புன்னகை சீரியலின் கதாநாயகன் சித்து சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று என்றென்றும் புன்னகை. இந்த தொடர் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை நீலிமா ராணியின் இசை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த தொடரில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், தீபக்குமார் மற்றும் நிதின் ஐயர் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடர் ‘மங்கம்மா காரி முனவாரலு’ என்ற தெலுங்கு மொழி தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் ஆண்டாள் தன்னுடைய பேரனை தன்னுடைய கைக்குளே வைத்து எல்லோரையும் அடக்கி ஆள்பவர். இவரை எதிர்த்து நிற்பவர் தான் நம்முடைய ஆர்ஜே தென்றல். முதலில் இவருக்கும் ஆகாஷ்க்கும் தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பின் சில காரணங்களால் தள்ளிப் போய் சித்தார்த்துக்கும் ஆர்ஜே தென்றலுக்கும் திருமணம் ஆகிறது.

- Advertisement -

என்றென்றும் புன்னகை சீரியல்:

இதனால் கோபமடைந்த ஆண்டாள் தென்றல், சித்தார்த்தையும் பழிவாங்குகிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய பேரன் ஆகாஷையும் சேர்த்து பழி வாங்குகிறார். இப்படி பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் இந்த சீரியலில் இருந்து சித்து கதாபாத்திரத்தில் நடித்த தீபக் குமார் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றென்றும் புன்னகை என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தீபக்.

தீபக்- அபிநவ்யா திருமணம்:

இவர் சீரியல் நடிகை அபிநவ்யாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். அபிநவ்யா அவர்கள் சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற பல் தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். பின் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சென்னையில் இருக்கும் ஒரு திருமண ஹாலில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-

சீரியலில் இருந்து விலகிய தீபக்:

அதற்கான வீடியோக்களை எல்லாம் அபி நவ்யா மற்றும் தீபக் தங்களுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திருமணம் முடிந்தும் தீபக் சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபக் சீரியலில் இருந்து விலகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து தீபக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பது, நான் என்றென்றும் புன்னகை சீரியலில் இருந்து விலகியது உண்மை தான். எனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் ரொம்ப நன்றி.

தீபக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பதிவு:

இதேபோல் உங்களுடைய ஆதரவு சித்து கதாபாத்திரத்தில் நடிக்கும் நபருக்கும் கொடுக்க வேண்டும். இந்த சீரியலுக்கும் உங்களுடைய ஆதரவு வேண்டும். கூடிய விரைவிலேயே ஒரு புதிய பிராஜக்ட் உடன் உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இப்படி தீபக் போட்டிருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் ஏன்? என்னாச்சு? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சித்து கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement