‘செண்பகமே செண்பகமே’ பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த ராமராஜன் பட நடிகை.

0
1321
shantipriya

எங்க ஊரு பாட்டுக்காரன் பட நடிகை பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நிஷாந்தி எனும் சாந்திப்பிரியா. இவர் முதல் படத்திலேயே தமிழக மக்களின் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பிரபல நடிகை பானுப்ரியாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் ஹிந்தி டிவி தொடர்களில் நடிக்க சென்றுவிட்டார்.

- Advertisement -

பிறகு பல ஆண்டுகளாக சினிமாவில் துறையில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சாந்திப்பிரியா அவர்கள் ஜீ ஸ்டூடியோ நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயகர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is senbagam.jpg

மேலும், இந்த வெப்சீரிஸ் இந்தி மற்றும் தமிழில் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு இவர் நடிப்பை பார்க்க பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement