இளம் நடிகருடன் லிப் லாக் காட்சியில் எங்க வீட்டு மாப்பிளை அபர்ணாதி.! ரசிகர்கள் ஷாக்.!

0
735
Aparnathi

கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில், பல இளம் பெண்கள் பங்குபெற்றனர். அதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அகர்பத்தி என்று செல்ல பெயரை பெற்ற அபர்ணதி.

20 வயதாகும் அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்றார். தற்போது ஜி வி பிரகாஷிக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்து வருகிறார்.

வசந்த பாலன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதமாக நடந்து வருகிறது. ஆனால், நீண்ட நாட்களாக படத்தின் எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை அபர்னத்தி ஜி பிரகாஷுடன் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இதுபற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபர்னதியிடன் கேட்டபட்ட போது, முத்தக்காட்சியில் நடித்திருப்பது உண்மை தான். ஆனால், அந்த அளவிற்கு ஒன்னும் மோசமானதாக இருக்காது. அந்த காட்சி நான் ஜி வி பிரகாஷை ஏமாற்றுவது போல அமைக்கபட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.