என்னமா ராமருக்காக விஜய் டிவி உருவாக்கிய ‘ராமர் வீடு’.! மனுஷன் யோகக்காரர் தான்.!

0
2102
ramar
- Advertisement -

விஜய் டிவி-யின் `அது இது எது?’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்பட பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வகையில் `என்னம்மா… இப்படிப் பண்றீங்களேம்மா’ ராமர் முக்கியமானவர். அந்த கேரக்டராகவே மாறி சிரிக்கவைக்கும் இவர், இப்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். 

-விளம்பரம்-

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று தான் கூற முடியும். தற்போது இவர் ஆண்ட்ருவுடன் சேர்ந்து சகல vs ரகள என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ராமரை மையமாக வைத்து விஜய் டிவியில் ‘ராமர் வீடு’ என்ற காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அவரின் வீட்டில் நடக்கும் காமெடிகளைத் தொகுத்து இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா, ஆதீஷ் (ஜட்டி ஜெகன்), யோகி, மா.கா.பா.ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement