வெளிய அனுப்புனவன் எல்லாம் டெவலப் ஆயிடுறான், புகழையும் வெளியில் அனுப்பியுள்ள மகேஷ் – வீடியோவிற்கு கீழ் குவியும் Gosu ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

0
630
mahesh
- Advertisement -

தன்னை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆடிஷனில் ரிஜெக்ட் செய்தது குறித்து மகேஷிடம், குக்கு வித் கோமாளி புகழ் கேட்ட நிலையில் அதற்கு மகேஷ் அளித்த பதிலை கண்டு பரிதாபங்கள் கோபி – சுதாகர் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஈரோடு மகேஷ். மகேஷ் அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை எல்லாம் ஈரோட்டில் தான் முடித்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழில் முனைவர் (Phd.,) பட்டப் படிப்பை தொடர்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டாண்டர்ட் காமெடியனாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானர். மேலும்,இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார். தற்போது இவர் காமெடி நடிகர் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கி வருகிறார். தொலைக்காட்சியில் இருந்த இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சும்மா நச்சுனு இருக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமமானார்.

- Advertisement -

விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கர் :

மேலும், சிகரம் தொடு, ஜம்புலிங்கம், இணையதளம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மகேஷ். தற்போது விஜய் டிவியின் முக்கிய நபராக இருந்து வருகிறார் மகேஷ். அதே போல பல நிகழ்ச்சிகளில் ஆங்கராகவும், நடுவராகவும் இருந்து வரும் இவர் தற்போது விரைவில் துவங்க இருக்கும் கலகப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் ஆங்கராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது.

அந்த வீடியோவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குக்கு வித் கோமாளி புகழ், மகேஷிடம் ‘இதே நிகழ்ச்சிக்கு நான் வந்து இருக்கிறேன், நீங்கள் என்னை இரண்டு முறை வெளியில் அனுப்பி விட்டீர்கள் என்று புகழ் கூற, அதற்கு மைனாவிடம் ‘ஒரு கலக்கப்போவது ஆடிஷனில் ஆயிரம் பேர் வருவார்கள் இதெல்லாம் எப்படி ஞாபகம் இருக்கும்’ என்று கூறியுள்ளார் ஈரோடு மகேஷ். அதே போல அந்நிகழ்ச்சியில் என்னுடன் நாலு பேர் கூட இருந்தார்கள். ஆனால் அவனுங்க எல்லாம் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

-விளம்பரம்-

புகழையும் வெளியில் அனுப்பியுள்ள மகேஷ் :

நான் மட்டும் மாட்டிக்கொள்கிறேன் நீங்க சொல்லுங்க நீங்க சொல்லுங்க என்று சொல்லுகிறார்கள். நாமளும் பெருமைப்படுத்த தான் அப்படி சொல்கிறார்கள் என்று நானும் சொல்லி விடுவேன். அப்புறம் வெளியில் அனுப்பி விட்டவுடன் டெவலப் ஆகிடுறான் அப்புறம் தான் தெரியுது நம்மை சிறுமைப்படுத்த அப்படி சொல்லி இருக்கான் என்று மகேஷ் கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் பரிதாபங்கள் கோபி சுதாகர் பெயரை குறிப்பிட்டு வருகின்றனர்.

பரிதாபங்கள் கோபி சுதாகர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். ஆனால், அதன் பின்னர் அவர்கள் இருவரும் மெட்றாஸ் சென்ட்ரல் யூடுயூப் மூலம் பிரபலமடைந்த பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியை கேலி செய்து கூட வீடியோ வெளியிட்டனர். இதனை குறிப்பிட்டே ரசிகர்கள் பலரும் மகேஷை கேலி செய்து வருகின்றனர்.

Advertisement