நிச்சயமான பின்னரும் என்னை பற்றி வதந்திகள் வந்தது, அதை பார்த்து என் கணவர்- எருமை சாணி ஹரிஜா பேட்டி.

0
9107
harija
- Advertisement -

எருமை சாணி என்ற யூடுயூப் விடியோக்கள் மூலம் பலரின் இதயங்களில் குடியேறிய ஹரிஜாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது. இதனால் சோகத்தில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஹரிஜாவை முன்பை போல காண முடியாதா என்று சோகத்தில் இருந்து வருகிறார்கள். யூடியூப் வலைதளத்தில் எருமை சாணி என்ற பக்கத்தில் விஜய் மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. எருமை சாணி’ சேனலில் இடம்பெற்ற விஜய், ஆர்ஜே விக்னேஷ்காந்த், மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர், ஷாரா, அகஸ்டின் என்று பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

-விளம்பரம்-

இதில் ஒரு சிலர் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர். மேலும், எருமை சாணி சேனலில் நடித்த விஜய் மற்றும் ராஜா இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால், தாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம் என்று இருவருமே கூறினார்கள் மேலும், ஹரிஜா வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதையும் பாருங்க : உலக நர்ஸ் தினம் . முதன் முறையாக நர்ஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஜூலி.

- Advertisement -

ஹரிஜா, அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவருடன் ஷார்ட் பிலிம்களில் ஹரிஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து ஷார்ட் பிலிம்ஸ்களில் நடித்து வருகிறார் ஹரிஜா. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஹரிஜா தனது கணவர் குறித்து பேசியுள்ளார்.

அதில், எங்களின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னரும் என்னை பற்றி பல்வேறு வதந்திகள் போய்க் கொண்டுதான் இருந்தது. ஆனால் என்னுடைய கணவர் என்னுடன் அமர்ந்து அதையெல்லாம் படித்து என்னுடன் ஒன்றாக சிரித்துக்கொண்டு தான் இருந்தார். எங்களின் திருமணத்தில் தாலி கட்டும் போது கூட எங்களை சுற்றி அனைவரும் அழுது கொண்டிருப்பதைக் கண்டு நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். ஆனால் அவர்மிகவும் கூலாக பதட்டம் இல்லாமல் தாலியை கட்டினார் என்று கூறியுள்ளார் ஹரிஜா

-விளம்பரம்-
Advertisement