கேலிக்கு உள்ளானாலும் TRPயில் கயல் மற்றும் எதிர் நீச்சல் சீரியலை மிஞ்சிய சீரியல் – எல்லாத்துக்கும் காரணம் அவர் தான்.

0
548
Kayal
- Advertisement -

கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்திருக்கும் சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள்.

-விளம்பரம்-

இதனால் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பி வருகிறார்கள். வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வெள்ளித்திரைக்கு அதிகம் செல்வதை விட சின்னத்திரையை தான் அதிகம் கவனிக்கிறார்கள். மேலும், தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களில் ஒன்று சன் டிவி.

- Advertisement -

சன் டிவி சீரியல்கள்;

தொலைக்காட்சி தொடங்கிய காலத்தில் இருந்து சன் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் சேட்டிலைட் சேனலாக தொடங்கிய நாளில் இருந்தே சன் டிவி தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. கேபிள் டிவி மூலம் நகரம் , கிராமம் என்று எல்லா இடங்களிலும் சன் டிவி சேனலை தான் மக்கள் அதிகம் பார்த்து வருகிறார்கள். சன் டிவி சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சித்தி சீரியலை தொடங்கி தற்போது ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் வரை என எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

டிஆர்பி பட்டியல் :

இதனால் வாரம் வாரம் மக்களை அதிகம் கவரும் சீரியல் என்று டிஆர்பி பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை வானத்தைப்போல சீரியல் தான் பிடித்திருக்கிறது. பொதுவாகவே கயல், எதிர்நீச்சல் சீரியல் தான் முதல் இரண்டு இடங்களை மாற்றி மாற்றி பிடித்திருந்தது. தற்போது இந்த சீரியலை பின்னுக்கு தள்ளி வானத்தைப்போல சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

-விளம்பரம்-

வானத்தைப்போல:

இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாச கதை. கிராமத்து பின்னணியில் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரை ராஜ் பிரபு எழுதுகிறார், ராமச்சந்திரன் இயக்குகிறார். இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது சீரியலில் சின்ராசை, ராஜபாண்டி கொலை செய்து விடுவது போல் காண்பிக்கிறார்கள்.

சீரியல் குறித்த தகவல்:

இதை போலீஸ் வீரசிங்கம் கண்டுபிடிக்கிறார். உண்மையாலுமே சின்ராசு கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதாவது ஆகிவிட்டதா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். இதனால் இந்த வாரம் இந்த தொடர் ரேட்டிங்க் 10.40. கடந்த வாரம் இந்த தொடரில் சஞ்சீவ் என்ட்ரி கொடுத்த போது பலரும் சமூக வலைத்தளத்தில் கேலி செய்தனர். ஆனால், அவரது என்ட்ரிக்கு பின்னர் தான் வானத்தை போல சீரியல் Trpயில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement