எதிர் நீச்சல் தொடரில் பிரியதர்ஷனிக்கு பதில் நடிக்க வந்த நடிகை – ஏற்க மறுத்தவர்களுக்கு கொடுத்த பதிலடி.

0
939
banumathy
- Advertisement -

சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து இருந்தார். பின் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார்.

-விளம்பரம்-

இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் மத்தியில் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

- Advertisement -

இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார்.மேலும், திருச்செல்வம் இயக்கிய சீரியல்கள் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் எல்லாம் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையாக அமைந்திருக்கும். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.

அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் பல பிற்போக்கு வசனங்கள் இருந்ததால் இந்த தொடருக்கு பல எதிர்புகள் எழுந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் டிடியின் அக்கா பிரியதர்ஷினி நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். தற்போது அவருக்கு பதிலாக சீரியல் நடிகை பானுமதி மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலர் இந்த மாற்றத்தை ஏற்க மறுத்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டா வாசி ஒருவர் பானுமதிக்கு ஆதரவாக பதிவிட்டு இருந்தார்.

அதில் ‘ஒவ்வொரு நடிகர்களும் வாய்ப்புகளை பெற மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை புறக்கணித்து விடுங்கள். புத்தாண்டில் இது போன்ற கலைஞ்சர்களை ஊக்குவியுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை கண்ட பானுமதி அந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பானுமதி இந்த தொடரில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

Advertisement