கோவம் வந்தா அஜித் பட்டுனு பேசிடுவார், ஆனா, விஜய் மனசுலேயே வச்சிக்கிட்டு – மாரிமுத்து சொன்ன சீக்ரெட்.

0
531
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாகவே யார் முன்னணி நடிகர் என்ற போட்டியானது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. முன்னர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி, அதற்கடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன், தற்போது விஜய் மற்றும் அஜித் என கடந்த காலம் முதல் இன்று வரையில் போட்டியானது நிலவி வருகிறது. இதில் விஜய்யும் அஜித்தும் ஒரே காலத்தில் தான் சினிமாவிற்கு அறிமுகமாகினார்கள். விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தொடக்க காலத்தில் உதவி செய்தார், ஆனால் அஜித்திற்கு அப்படி யாரும் கிடையாது.

-விளம்பரம்-

விஜய் தன்னுடைய அப்பாவின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் அதற்கு பிறகு தன்னுடைய முயற்சியினால் தற்போது தமிழ் சினிமா நடிகர்களின் முன்னிலையில் இருக்கிறார். அதோடு இவரில் நடிப்பில் வெளிவரும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்து வசூலிலும் ஹிட் அடிக்கின்றனர். அதே போல அஜித்தும் தொடக்கத்தில் சில தோல்வியை சந்தித்தாலும் போக போக வெற்றிப்படங்களை கொடுக்க தொடங்கிவிட்டார்.

- Advertisement -

யார் முன்னணி நடிகர் சர்ச்சை :

இவர்கள் இருவருக்கும் இடையே போட்டியானது 2000களிலேயே தொடங்கி விட்டது. அன்றிலிருந்து யார் முதன்மை நடிகர் என்பதில் இருவருக்குமே மோதல் இருந்து வருகிறது. ஆனால் அதனை நேரடியாக வெளிகாட்டிக்கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து விஜய் அஜித் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

எதிர்நீச்சல் மாரிமுத்து :

எதிர்நீச்சல் மாரிமுத்து “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு குணச்சித்திர நடிகராகவும் பல படங்களின் நடித்து விட்டார். ஆனால் இவர் முதலில் இயக்கிய “கண்ணும் கண்ணும்” படம் அந்த அளவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை ஆனாலும் அந்த படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமாக இன்றும் இருக்கின்றது. தற்போது மாரிமுத்து சன் டிவியில் மிகப்பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்,

-விளம்பரம்-

விஜய், அஜித் பற்றி :

இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றியும் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் பற்றியும் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் பேசியிருந்தார். அவர் கூறுகையில் “விஜய் மற்றும் அஜித்துடன் நான் ஆரம்பகாலத்தில் அவர்களுடன் பேசி பழகியிருக்கிறேன். அஜித் தன்னுடைய மனதில் என்ன நினைக்கிறாரோ அதனை அப்படியே செய்து சொல்லிவிடுவார் மனதிற்குள் வைத்துக்கொள்ளமாட்டார் .

வேறுவிதமான தண்டனை வரும் :

ஆனால், விஜய் அப்படி கிடையாது ஒருவரின் மீது கோவம் இருந்தால் அதனை வெளிக்காட்டி கொள்ளமாட்டார் சிரித்து பழகுவார். ஆனால் சில நாட்கள் கழித்து விஜய்க்கு வெறுப்பு உள்ள நபருக்கு வேறு வகையில் தண்டனை வரும் என்று அந்த பேட்டியில் கூறினார் எதிர்நீச்சல் மாரிமுத்து. இவர் கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இது குறித்து ரசிகர்ளும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து :

சிலர் கூறுகையில் “யார் நம்பர் 1 என்ற சர்ச்சை தொடங்கிய பிறகு அதனை விஜய் நினைத்திருந்தார் நிறுத்தியிருக்கலாம், ஆனால் ஒரு குட்டி கதை சொல்லி “தனக்கு போட்டி தான் மட்டும் தான்” என்றும் அஜித் எனக்கு போட்டிக்கிடையாது என்பது போல அவரின் பேச்சு இருந்தது வாரிசு இசை வெளியிட்டு விழாவில் இருந்தது. அதே போல “மாஸ்டர்” இசை வெளியிட்டு விழாவில் “நம்ம நண்பர் அஜித்” என்று கூறிவிட்டு வாரிசு விழாவில் எதுவும் கூறாமல் தான் மட்டும் தான் தனக்கு போட்டி என்று விஜய் கூறியதை வைத்து பார்க்கும் போது மாரிமுத்து சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement