நீச்சல் குளத்தில் எதிர் நீச்சல் ரேணுகா – ஆத்தி, குணசேகரன் பாத்தா என்ன ஆவரது

0
1206
- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு இடம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். காலம் கடந்தாலும் மக்கள் மத்தியில் என்றென்றும் இடம்பிடித்திருக்கும் தொகுப்பாளர்கள் என்றால் சிலர் தான். அந்த வரிசையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி.

-விளம்பரம்-

இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடித்துக் கொண்டும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். இவருடைய அக்கா தான் பிரியதர்ஷினியும் சின்னத்திரையில் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக வலம்வந்து கொண்டு இருப்பவர். இவர் தமிழ் திரை உலகில் தாவணிக் கனவுகள், இதயகோயில் மற்றும் மலையாளத்தில் கூட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

மேலும், இவர் இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் ‘கல்கி’ என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார்.அதன் பிறகு புலி வருது, காளிதாஸ் ஆகிய பல தமிழ் படங்களில் பிரியதர்ஷினி நடித்து இருந்தார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் அக்னிப் பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், ரேகா IPS, தமிழ் கடவுள் முருகன் என பல சூப்பர் ஹிட் டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார் ப்ரியதர்ஷினி.

தற்போது ‘ஹாட் & கூல் மீடியா’ என்ற யூ-டியூப் சேனலில் தொடர்ந்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார் ப்ரியதர்ஷினி. இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தனியார் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு போன்ற பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் டான்ஸரும் ஆவார். மானாட மயிலாட, பாய்ஸ் VS கேர்ள்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே பிரியதர்ஷினி, ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார் பிரியதர்ஷினி. திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்ட பிரியதர்ஷினி நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பானநம்ம வீட்டு மீனாட்சி என்ற தொடரில் கதாநாயகியின் அத்தை கதாபாத்திரத்தில் ரீ – என்ட்ரி கொடுத்தார்.

தற்போது சன் டிவி-யின் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் இந்த தொடர் தான் டாப்பில் இருந்து வருகிறது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியதர்ஷினி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் 44 வயதாகும் பிரியதர்ஷினி, தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

Advertisement