எதிர்நீச்சல் சீரியல் அரசு யார் தெரியுமா? மனோரமாவிற்கும் இவருக்கும் இப்படி ஒரு சம்மந்மா ?

0
1006
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் அரசு குறித்து பலரும் அறிந்திடாத தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை.

-விளம்பரம்-

சீரியலில் மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். தற்போது சீரியலில் அருண்- ஆதிரை திருமணம் நடக்க பல டிவிஸ்டுகள் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலருமே விரும்பி பார்த்து வருகிறார்கள். மேலும், இந்த சீரியலில் குணசேகரனுக்கு இணையாக டப் கொடுக்கும் கதாபாத்திரமாக இருப்பது அரசு கதாபாத்திரம் தான். இவருடைய உண்மையான பெயர் கிரி துவாரகேஷ்.

நடிகர் கிரி குறித்த தகவல்:

இந்நிலையில் நடிகர் கிரி குறித்து பலரும் அறிந்திடாத தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் கிரியின் சொந்த ஊர் பெங்களூர். இவருடைய அப்பா கர்நாடகத்தில் மிகப்பெரிய இயக்குனர். இவர் பெங்களூரில் இருந்து எட்டு வயதில் சென்னைக்கு வந்துவிட்டார். சென்னையில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் தான் இவர் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தார்.இவர் முதலில் படத்தில் தான் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

கிரி நடித்த படங்கள்:

இவர் நடித்த முதல் படத்தை அவருடைய தந்தையே இயக்கினார். அந்த படம் கன்னடத்தில் மஜ்னு என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அந்த படத்தை தான் தமிழில் லவ் டுடே என்ற பெயரில் விஜய் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே இவருக்கு வெற்றியாக அமைந்ததால் அடுத்தடுத்து பல படங்களில் கிரி நடித்தார். அதற்குப் பிறகு இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு தமிழில் படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனால் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.

கிரியின் சின்னத்திரை பயணம்:

இவர் பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் என்று சொல்லலாம். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த ரோஜா , பிரியமான தோழி ஆகிய சீரியலில் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் எதிர்நீச்சல் சீரியலில் அரசு கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இவர் இந்த அளவிற்கு மீடியாவில் பிரபலமாக இருப்பதற்கு காரணம் நடிகை மனோரமாவின் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் படித்தது தான் என்று ஒரு பேட்டியில் கூட கிரி கூறி இருந்தார்.

Advertisement