‘தெலுங்கு படத்த மட்டும் ஆதரிக்கிறீங்க, அப்புறம் ஏன் தமிழ்ல நடிக்கிறீங்க’ – பீஸ்ட் முதல் பாடல் வெளியான நிலையில் பூஜா ஹேக்டேவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
455
beast
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

-விளம்பரம்-

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் ‘முகுந்தா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே.

- Advertisement -

பீஸ்ட் நாயகி பூஜா :

தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘ஆரபிக் குத்து’ பாடல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடிசூடா மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் நடிப்பில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

பீஸ்ட் முதல் பாடல் :

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

-விளம்பரம்-

பீஸ்ட்டை கண்டுகொள்ளாத பூஜா :

இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடல் ‘அரபிக் குத்து’ இன்று வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹேக்டேவை விஜய் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே இந்த பாடல் வெளியாகும் முன்னர் குறித்து எந்த ஒரு பதிவையும் அவர் போடாதது தான்.

திட்டி தீர்க்கும் ரசிகர்கள் :

ஆனால், தெலுங்கில் பிரபாஸுடன் இவர் நடித்துள்ள ‘ராதே ஷாம்’ படத்தை பற்றிய அப்டேட்டை பற்றி மட்டும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் பூஜா ஹேக்டேவை விமர்சித்து வருகின்றனர். இந்த படம் மட்டும் உங்களுக்கு சம்பளம் கொடுக்கல, Beast la yum நீங்கள் சம்பளம் வாங்குரிங்கா அதனால் கொஞ்சம் Beast பத்தியும் கொஞ்சம் பேசுங்க, தெலுங்கு படத்தை மட்டும் ஆதரிக்கிறீர்கள், அப்பரம் ஏன் தமிழில் நடிக்கிறீர்கள் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

பூஜைக்கே வராத பூஜா :

அதே போல பீஸ்ட் படத்தின் பூஜைக்கு கூட பூஜா ஹேக்டே வரவில்லை. இதுகுறித்து பதிவிட்ட அவர் நான் வேறு ஒரு இடத்தில் ஷூட்டிங்கில் இருப்பதால் தளபதி 65 படத்தின் முகுர்த பூஜையில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், என்னுடைய மனமும் எண்ணமும் படக்குழுவுடன் தான் இருக்கும். விரைவில் கலந்துகொள்ள காத்துகொண்டு இருக்கிறேன் என்று கூறி இருந்தார். இதனால் அப்போதும் விஜய் ரசிகர்கள் இவரை விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement