மெர்சல் படத்தில் குட்டி விஜய்யாக நடித்த அஸ்வத்தை பரபல பாலிவுட் நடிகர் பாராட்டியுள்ளார். தெறி படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் வெளியான படம் மெர்சல். 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் மட்டும் மாபெரும் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு முன்னாலே அப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. அதிலும் குறிப்பாக ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியானதும் அரசியலுக்கு விஜய் வருவாரா என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் பாடல் வரிகள் தமிழகம் முழுதும் ஒலிக்கத்தொடங்கின.
பல முன்னனி நடிகர்கள் இந்தப்படத்தில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அப்பா விஜய்க்கு மகன் கேரக்டரில் நடித்து அசத்திய குட்டி விஜய் “அக்ஷாந்த்”தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. தனது அழகான சிர்ப்போடு கூடிய திறமையான நடிப்பால் இளம்வயதிலேயே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்ட அஷாந்த் மெர்சல் படம் வெளியானவுடனே வளர்ந்தவுடன் விஜய் போல இருக்க ஆசை என தனது ஆசையை தெரிவித்திருந்தார்.
மெர்சல் படத்திற்கு பின்னர் அஷாந்த்தை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. ஆனால், இவரை டிவி விளம்பரத்தில் மட்டும் பார்க்கமுடிந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் பாலிவுட்டில் வெளியாகியுள்ள ‘சீரியஸ் மென்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அக்டோபர் மாதம் 2-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள அக்ஷ்வாத்தை நடிகர் நவாஸுதீன் சித்திக் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் நவாஸுதீன் சித்திக் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “அக்ஷத்தை குழந்தையாக நடத்தக் கூடாது என்பதை அவன் எனக்கு என்றுமே உணர்த்தியிருக்கிறான். இயக்குநரின் பார்வையில் சரியாக விஷயத்தை புரிந்து கொள்ளும் திறமை அவனுக்கு இருக்கிறது. அவனது இந்த குணநலன்கள் என்னை அவன் முன் சரணடைய வைத்துவிட்டது” என்று கூறியுள்ளார்.