சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியலில் மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.
அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். பின் வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். கடந்த சில வாரங்களாகவே சீரியலில் தர்ஷினி கடத்தல் டிராக் தான் சென்று கொண்டிருக்கின்றது.
எதிர்நீச்சல் சீரியல்:
தன் தந்தை குத்து சண்டை விளையாட்டுக்கு போகக்கூடாது என்று சொன்னவுடன் சோகத்தில் தர்ஷினி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரை மர்ம நபர்கள் கடத்தி விடுகிறார்கள். தர்ஷினி காணவில்லை என்று அவருடைய அம்மா, சித்திமார்கள் எல்லாம் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குணசேகரன், விசாலாட்சி இருவரும் தர்ஷினியை மறைத்து வைத்திருப்பதே ஈஸ்வரி தான். அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள் என்று வழக்கம்போல் ஈஸ்வரி மற்றும் மற்ற பெண்களை தான் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
யாரும் எதிர்பாராத வகையில் கதிர், ஞானம் இருவரும் அவர் அண்ணனுக்கு எதிராகவே பேசுகிறார்கள். தர்ஷினியை தேட செல்கிறார்கள். இதனால் ஆத்திரம் தாங்காத குணசேகரன், கதிர்- ஞானம் இருவரையும் திட்டுகிறார். பின் ஜீவானந்திடம் தான் என் மகளை ஈஸ்வரி ஒப்படைத்திருப்பார். அதனால் ஜீவானந்தத்தை கைது செய்ய வேண்டும் என்று போலீஸிடம் புகார் கொடுக்கிறார் குணசேகரன். போலீசும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வாரம் தர்ஷினியை கடத்தி சென்ற இடத்திற்கு ஜனனி, ஈஸ்வரி எல்லோருமே போனார்கள்.
சீரியல் டீவ்ஸ்ட்:
அதற்கு முன்னே தர்ஷினி ரவுடி கும்பலிடம் இருந்து தப்பித்து விடுகிறார். இன்னொரு பக்கம் காவல் நிலையத்தில் குணசேகரன் கொடுத்த வழக்கின் புகாரின் அடிப்படையில் ஜீவானந்தம் மற்றும் வீட்டு பெண்கள் எல்லோரையும் போலீஸ் கைது செய்து தாறுமாறாக அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள். இதை எல்லாம் பார்த்து கதிர், ஞானம், சக்தி மனம் உடைந்து புகாரை வாபஸ் வாங்க சொல்லி குணசேகரனிடம் முறையிடுகிறார்கள். ஆனால், குணசேகரன் முடியாது என்று சண்டை போடுகிறார்.
இன்றைய எபிசோடுகான ப்ரோமோ:
இப்படி இருக்கும் நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில்,. நீதிமன்றத்தில் எல்லா பெண்களும் இருக்கிறார்கள். தர்ஷினி உடைய வீடியோ ஒன்று வெளியாகிறது. அதில் தர்ஷினி சொல்வதைக் கேட்டு ஈஸ்வரி, ஜனனி, நந்தினி, ரேணுகா அனைவருமே ஷாக் ஆகி நிற்கிறார்கள். அப்படி என்ன தர்ஷினி சொல்கிறார்? ஈஸ்வரி என்ன செய்ய போகிறார்? குணசேகரின் திட்டம் நிறைவேறுமா? தர்ஷினி எங்கு இருக்கிறார்? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.