பத்து வருடம் நடிக்க சொன்னாலும் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பேன் என்று நடிகை மதுமிதா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை. மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியல்:
அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் அருண்- ஆதிரை திருமணம் நடக்க பல டிவிஸ்டுகள் சென்று கொண்டிருக்கின்றது. பட்டம்மாள் அப்பத்தாவின் 40 சதவீதம் சேரை வாங்குவதற்கு ஆதி குணசேகரனும், அரசும் திட்டம் போடுகிறார்கள்.
சீரியலின் கதை:
இவர்களிடம் அப்பத்தா தன் சேரை கொடுப்பாரா? ஆதிரை- அருண் திருமணம் நல்லபடியாக நடக்குமா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது . இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலருமே விரும்பி பார்த்து வருகிறார்கள். மேலும், இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இவர் கன்னட சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார். இருந்தாலும், தற்போது இவர் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
மதுமிதா குறித்த தகவல்:
இவர் ஏற்கனவே கன்னடம், தெலுங்கு சின்னத்திரை சீரியல்களின் நடித்திருக்கிறார். ஆனால், எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மதுமிதா அழகாக தமிழ் பேசி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மதுமிதா அவர்கள் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் அவர் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்து கூறியது, இதற்கு முன் நான் பல சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதில் எல்லாம் ஓவர் ஆக்ட் செய்வேன். அந்த சீரியல்களுக்கு தேவைப்பட்டது.
சீரியல் குறித்து சொன்னது:
ஆனால், எதிர்நீச்சல் தொடரில் நிஜ வாழ்க்கையில் இருப்பது போலவே இருக்கிறது. அதனால் என்னை அந்த சீரியலில் எளிதாக கனெக்ட் செய்ய முடிகிறது. மற்ற சீரியல்களைப் போல் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. ஈஸ்வரி, நந்தினி கதாபாத்திரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். குறிப்பாக, மாரிமுத்து அனைவர் வீட்டிலும் இருக்கிறார். மாரிமுத்துவை அடிக்க வேண்டும் என என்னிடம் பல பேர் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அனைவரிடத்திலும் அவருடைய கதாபாத்திரம் ரீச் ஆகி இருக்கிறது. இந்த தொடரில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இன்னும் 10 வருடம் இந்த தொடரில் நடிக்க சொன்னாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன். இங்கேயே செட்டில் ஆகிவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.